Foods for Immunity: சோர்வைப் போக்கும் சோளம் உண்டால் உற்சாகம் ஊற்றெடுக்கும்

'மைதா' மற்றும் அனைத்து மாவுகளுக்கும் ஆரோக்கியமான மாற்று சோள மாவு! இதை சொல்வது பாட்டி அல்ல, இரு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்....

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2021, 02:36 PM IST
  • சோர்வைப் போக்கும் சோளம்
  • மைதாவுக்கு சிறந்த மாற்று சோள மாவு
  • சோளம் விதைத்தால் சோடை போகாது
Foods for Immunity: சோர்வைப் போக்கும் சோளம் உண்டால் உற்சாகம் ஊற்றெடுக்கும் title=

சோளம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுதானியமான சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நமது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. சோளத்தின் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் தொடர்ந்து சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிவிக்கின்றன.

சோளத்தின் தன்மை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தி உதவும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பசையம் இல்லாத சோளம் 'மைதா' மற்றும் அனைத்து மாவுகளுக்கும் ஆரோக்கியமான மாற்று என கான்பூர் தேசிய சர்க்கரை நிறுவனத்தில் (NSI) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் உள்ள ICAR-IIMR உடன் இணைந்து NSI கான்பூர் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பயிரின் தண்டு/தண்டு சாறு எத்தனால், வெல்லம் மற்றும் சத்தான குறைந்த கலோரி சர்க்கரை பாகு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சோளப் பயிரில் இருந்து கிடைக்கும் தானியம், 'மைதா' அல்லது 'கோதுமை மாவு'க்கு பதிலாக ஆரோக்கியமான மாவாகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

ALSO READ | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு

சோளத்தில் புரதம், இரும்பு, தாமிரம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. சோளத்தில் இருக்கும் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.

சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் மோகன் கூறினார். சோளத்தை அன்றாடஉணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு தினசரி தேவையான நார்ச்சத்துகளில் கிட்டத்தட்ட 44 சதவீதம் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

சோள தானியத்தில் உள்ள வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் சோளம் தற்போதைய காலத்தில் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய தானியமாக சோளம் மாறிவிட்டது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.  

READ ALSO | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்

சோளம் விதைத்தால் சோடை போகாது

சோளம் நமது ஆரோக்கியத்திற்கு பயன்படும் தானியம் மட்டுமல்ல, சோளப் பயிரை பயிரிடும் விவசாயிகள், பயிர்களின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்த முடியும் என்பதும் இதன் சிறப்பு. விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிராகவும் சோளம் திகழ்கிறது.  

குறுகிய கால பயிரான சோளம், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யக்கூடியது என்பதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  

Also Read | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலையின் இனிக்கும் ஆரோக்கியம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News