தொளதொளவென தொங்கும் வயிறு வேண்டுமா? ஆலிழை போல அழகான உடல்வாகு வேண்டுமா? உங்கள் சாய்ஸ்

Healthy Belly Tips: தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது படிப்படியான செயல் ஆகும், ஒரே நாளில் குறைவதும் இல்லை, அதேபோல, ஒரே நாளில் உடலில் எடை கூடுவதும் இல்லை.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2023, 04:58 PM IST
  • தொப்பை கொழுப்பை விரைவாகக் குறைக்க வேண்டுமா?
  • ஒரே நாளில் உடலில் எடை கூடுவது இல்லை
  • உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறை
தொளதொளவென தொங்கும் வயிறு வேண்டுமா? ஆலிழை போல அழகான உடல்வாகு வேண்டுமா? உங்கள் சாய்ஸ் title=

நமது வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாத வேலைச்சூழல் ஆகியவற்றால் உடல் எடையையும், அடிவயிற்றில் கொழுப்பு படிவதையும் தடுப்பது கடினமாகிவிட்டது. உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்து, விரைவாக ஒல்லியாக வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர்.

தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவ, பலரும் பலவிதமான குறிப்புகளைக் கொடுத்தாலும், மிகவும் சுலபமாக உடல் எடையையும், ஆலிழைப் போன்ற தட்டையான வயிறையும் பெற உதவும் 10 எடை குறைப்பு டிப்ஸ்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.  

உங்கள் உணவை மேம்படுத்தவும்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களுக்குப் பதிலாக முழு உணவுகளையும் மாற்றுவதன் மூலம் தொடங்குங்கள்.

ஆரோக்கியமான கொழுப்புகள்

வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வது, உடலை ஆரோக்கியமாகவும், பளபளபபனதாகவும் மாற்றும். உடலின் உள்ளுறுப்புகள் வலுப்பெற்று பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

உடற்பயிற்சி

கார்டியோ மற்றும் எடை பயிற்சி நடைமுறைகளை இணைப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும், உடற்பயிற்சிகளுக்கு மட்டும் விடுமுறை விடவே வேண்டாம்.

மேலும் படிக்க | மகிழ்ச்சியாக வாழ இந்த 6 வழிமுறைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்

சர்க்கரை சேர்த்த பொருட்கள்

அதிக அளவு சர்க்கரை சேர்த்தால் தொப்பையில் கொழுப்பு சேரலாம். எனவே சர்க்கரை நுகர்வை குறைக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால், இனிப்புக்கு மாற்றாக பழங்களை சாப்பிடுவது இயற்கை சர்க்கரையை உடலில் செர்க்கும்.

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

மன அழுத்தம் உங்கள் உடலில் கொழுப்பு விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். யோகா, தியானம், ஏதேனும் பொழுதுபோக்கில் மனதை செலுத்துவது என மன அழுத்தத்தைக் குறைக்கும் விஷயங்களில் கவனத்தைத் திருப்புங்கள்.

ஊட்டச்சத்து உணவுகள்

ஊட்டச்சத்து உணவுகள், அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்: புரதம் பசி ஏற்படாமல், முழுதாக உணரவைக்கும். அதுமட்டுமல்ல, உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.

தண்ணீர்

நிறைய தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவும்

மது அருந்துவதைக் குறைக்கவும்

மதுவைக் குறைப்பது அல்லது மதுவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். இது வெறும் வார்த்தையல்ல, உண்மையில் மது அருந்தும்போது, காரசாரமான உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் என அதிக அளவில் உணவு உட்கொள்ள வேண்டும். இது நேரடியாக உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | இடுப்பு கொழுப்பை குறைக்கும் ஜூஸ் - டிரை பண்ணி பாருங்க

ஆழ்ந்த உறக்கம்

தூக்கம் குறைவதும், ஆழ்ந்த உறக்கம் இல்லாததும் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பையில் கொழுப்பு படிவதை அதிகரிக்கும். நாளொன்றுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூக்கம் இருந்தால், உடல் எடையும் கூடாது, மன அழுத்தமும் ஏற்படாது.

தொடர் முயற்சி

தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது படிப்படியான செயல் ஆகும், ஒரே நாளில் குறைவதும் இல்லை, அதேபோல, ஒரே நாளில் உடலில் எடை கூடுவதும் இல்லை. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்வது எடையைக் குறைக்க உதவும், ஊளைச்சதை ஏற்படாமல் காக்கும். 

தொளதொளவென தொங்கும் வயிறு வேண்டுமா? ஆலிழை போல அழகான உடல்வாகு வேண்டுமா? முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னால், குண்டு பூசணிக்காய் என்ற பட்டப்பெயர் கிடைக்கும், இரண்டாவது கேள்விக்கு ஆம் என்பது பதிலாக இருந்தால், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை படிப்பதோடு நிறுத்தாமல், தொடர்ந்து பயன்படுத்தி சிக்கென்ற உடல்வாகைப் பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவில் தயிர் சாப்பிடலாமா? வேண்டாமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News