கொலஸ்ட்ரால் அளவு குறையணுமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்

High Cholesterol: உடலில் உள்ள செல்கள், வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கொலஸ்ட்ராலின் காரணமாக, பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 17, 2023, 02:45 PM IST
  • மீன், கடுகு எண்ணெய், ஆளி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
  • இவற்றில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது.
  • இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு குறையணுமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும் title=

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் குறிப்புகள்: இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையுடன் போராடி வருகின்றனர். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. நல்ல கொழுப்பு உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என்று அழைக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களின் உருவாக்கத்தில் இது முக்கிய இடத்தை வகிக்கின்றது. மறுபுறம், கெட்ட கொழுப்பு குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) என்று அழைக்கப்படுகிறது. இது இதயத்தின் தமனிகள் மீது குவிகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் உருவாகும் பிரச்சனைகள் 

உடலில் உள்ள செல்கள், வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கொலஸ்ட்ராலின் காரணமாக, பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பாமாயில், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்பு கொண்ட எண்ணெயால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 

மோசமான வாழ்க்கை முறையால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் தொடங்குகிறது. பிபி பிரச்னை உள்ளவர்கள், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் உணவில் ஆரோக்கியமான விஷயங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கலாம். 

மேலும் படிக்க | கருவுறுதலில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் 

கஞ்சி

கொலஸ்ட்ராலை குறைக்க கோதுமை ரவை கஞ்சி மிக நல்லது. கோதுமை ரவை கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது மற்றும் இது எல்டிஎல்-ஐக் குறைக்கிறது. இதைத் தவிர, முழு தானியங்கள் அல்லது முளைத்த தானியங்கள், ஆப்பிள்கள் மற்றும் கரும்பு ஆகியவை கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன. காலை உணவில் இவற்றை சேர்த்துக்கொண்டால் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

மீன், கடுகு எண்ணெய், ஆளி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சால்மன், டுனா மீன் போன்றவற்றில் நல்ல கொலஸ்ட்ரால் பொதுவாகக் காணப்படுகிறது. சியா விதைகள், ராகி, ஆளி விதைகள், தினை போன்றவற்றை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும்.

உலர் பழங்கள்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வாதுமைக்கொட்டை உகந்ததாக இருக்கும். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இதில் மல்டிவைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆனால் பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க | Healthy Tips: தினமும் அதிகாலை வெந்நீர், ஆஹா பலன்கள் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News