COVID-19 Update: புதிய பாதிப்புகள் 73,272; மொத்த பாதிப்புகள் சுமார் 70 லட்சம்

தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் விகிதம் 85.52 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.54 சதவீதமாக குறைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2020, 02:40 PM IST
  • இந்தியாவின் COVID-19 நோய்த்தொற்று எண்ணிக்கை சுமார் 70 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 926 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,07,416 ஆக உள்ளது.
  • மொத்தம்உள்ள 69,79,424 தொற்று பாதிப்புகளில், 8,83,185 பேர் ஆக்டிவ் நோயாளிகள்.
COVID-19 Update: புதிய பாதிப்புகள் 73,272; மொத்த பாதிப்புகள் சுமார் 70 லட்சம் title=

புதுடில்லி: ஒரே நாளில் 73,272 தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று இந்தியாவின்  COVID-19 நோய்த்தொற்று எண்ணிக்கை சுமார் 70 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 926 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,07,416 ஆக உள்ளது. மொத்தம்உள்ள  69,79,424 தொற்று பாதிப்புகளில், 8,83,185 பேர் ஆக்டிவ் நோயாளிகள். 59,88,822 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி, ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 12.94 சதவீதமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைந்துள்ளதை அடுத்து, குணமடையும் விகிதம், 85.52 சதவீதமாகஅதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தரவுகளின்படி, இந்தியா வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11,64,018 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா 39,732 இறப்புகள் உட்பட மொத்தம் 15,06,018 தொற்று பாதிப்புகள் என மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது; அதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி அகிய மாநிலங்கள் உள்ளன.

மேலும் படிக்க | ஊரக பகுதியில் 100% குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நனவாக்கிய கோவா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News