காது குடைய பிடிக்குமா? செவித்திறன் பாதிக்கலாம்..எச்சரிக்கும் மருத்துவர்கள்..

பலருக்கு buds வைத்து காது குடைவதென்றால் மிகவும் பிடிக்கும். இதனால், செவித்திறன் பாதிப்படையலாம்.   

Written by - Yuvashree | Last Updated : May 31, 2024, 05:34 PM IST
  • காது குடைவதால் ஏற்படும் பிரச்சனை
  • காது கேளாமலே போகலாம்
  • மருத்துவர்கள் எச்சரிக்கை
காது குடைய பிடிக்குமா? செவித்திறன் பாதிக்கலாம்..எச்சரிக்கும் மருத்துவர்கள்.. title=

இந்திய இல்லங்கள் அனைத்திலும் நாம் பார்க்கும் ஒரு பொதுவான பொருளாக இருப்பது, காதுகுடையும் பட்ஸ். வயது வந்தவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பலர் இதை உபயோகிக்கின்றனர். இவ்வளவு ஏன்? பிறந்த கைக்குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றிய பின்பு கூட அவர்களின் காதுகளில் பாதுகாப்பாக இந்த பஞ்சை வைத்து காது குடைகின்றனர். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

காது குடைவது:

எதுவும் செய்யாமல் இருக்கும் நேரத்தில், பலருக்கு தங்களது காதை குடைய வேண்டும் போல தோன்றும். இது, காது சுத்தம் செய்யும் முறைதான் என்றாலும், இதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. நாம், தனியாக காது குடைய வேண்டும் என்கிற அவசியமே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், காதுகளுக்கு அதுவாகவே சுத்தம் செய்து கொள்ளும் திறன் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. காதுக்குள் இருக்கும் கேட்கும் திறன் சவ்வில் (Ear Drum) தூசு, அழுக்கு எதுவும் பட்டுவிடக்கூடாது என மெழுகு போன்ற திரவத்தை காது உருவாக்குகிறது. இதனால், காது சவ்வும் பாதுகாப்பாகிறது. 

மேலும் படிக்க | COVID Ear: கொரோனாவினால் காது வலி - இரைச்சல்? மருத்துவர் கூறுவது என்ன!

காது துளைக்குள் இருக்கும் சவ்வை பாதுகாக்க, இயற்கையான லூப்ரிக்கண்ட் (lubricant) உருவாக்கப்படுகிறது. ஆனால், நாம் காட்டன் பட்ஸை வைத்து காது குடைகையில், அந்த லூப்ரிக்கண்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாக காதுக்குள் தள்ளப்படுகிறது. இதனால், காது துளையில் அடைப்பு ஏற்படலாம். இது நம் காதுகளில் அசௌகரியமான உணர்வை உருவாக்கலாம். 

காது துளையில் சேதம்:

காது குறித்து பேசும் ENT நிபுணர்கள், நம் காது துளைகள் எளிதாக சேதமடைந்துவிடக்கூடியவை என கூறுகின்றனர். காட்டன் பட்ஸை மிக அழுத்தமாக உள்ளே செலுத்தினால் அது உள்ளிருக்கும் ஏதேனும் மெல்லிய சதையை கீறி சேதம் ஏற்படுத்தும் என கூறுகின்றனர். இதனால், வீக்கம், காது வலி அல்லது ரத்தம் வழிதல் போன்ற பிரச்சனைகள் கூட உருவாகலாம் என எச்சரிக்கின்றனர். 

காது கேளாமல் போவது:

வெளியில் இருக்கும் காது, உள்ளிருக்கும் காது செவிலிருந்து, உள்ளிருக்கும் காதிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும். நமக்கு காது கேட்பதற்கு பெரிதும் உதவுவதே, காது சவ்வுதான். ஆனால், இதை நாம் உள் செலுத்தும் காது குடையும் பஞ்சு சேதப்படுத்த அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். அப்படி காது சவ்வு அதிகமாக சேதம் அடைந்தால் மயக்கம் வருதல், காதுகளில் ஒலி கேட்பது போன்ற பிரச்சனை ஏற்படும். காதில் ஏற்பட்டிருக்கும் அடி, சிறியதாக இருந்தால் அது தானாகவே சரியாகிவிடுமாம். ஆனால் அது பெரியதாக இருந்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரலாம் என்றும் கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காது கேளாமை... நரம்பு மண்டல பாதிப்பு... இயர்போனை அதிக நேரம் யூஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News