இந்தியாவில், கொரோனா வரைஸ் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கிட்டதட்ட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் தொடங்கி விட்டன. பொது போக்குவரத்தும் ஓரளவு தொடங்கி விட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த எண்ணிக்கை 57,32,518 என்ற அளவில் உள்ளது. மொத்த எண்ணிக்கையில் தற்போது ஆக்டிவ் நோயாளிகள் 9,66,382 பேர். 46,74,987 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,129 இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 91,149 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணம்டையும் விகிதம் 81.55 என்ற அளவில் உள்ளது. இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!
மாநிலங்களை பொறுத்தவரை, மகாராஷ்டிராவில், அதிக பாதிப்பு உள்ளது. அங்கு 33,886 பேர் இறந்துவிட்டனர். மொத்தம் 12,63,799 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தரவுகளின்படி, இந்தியா புதன்கிழமை ஒரே நாளில் 11,56,569 மாதிரி சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 6,74,36,031 என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR