Weight Loss Drinks: உடல் பருமன் சட்டென்று குறைய உதவும்... ‘மேஜிக்’ வெயிட் லாஸ் பானங்கள்..!

Weight Loss Drinks: உணவு பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கொழுப்பைக் கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2023, 07:35 PM IST
  • சில பானங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியைக் குறைக்கின்றன.
  • எடையைக் குறைக்க சில பானங்கள் உங்களுக்கு பெரிதும் உதவும்.
  • காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான 3 எடை இழப்பு பானங்கள்.
Weight Loss Drinks: உடல் பருமன் சட்டென்று குறைய உதவும்... ‘மேஜிக்’ வெயிட் லாஸ் பானங்கள்..! title=

Weight Loss Drinks: பண்டிகைகளைக் கொண்டாடும் போது எண்ணெய் மிக்க தின்பண்டங்கள் மற்றும் சுவையான இனிப்புகள் என வெளுத்து வாங்கி இருபோம். இந்நிலையில், பெரும்பாலானோர் ஏறிய எடைய குறைக்க கடும் முயற்சி எடுக்க வேண்டும் என நினைத்திருப்பார்கள். எடை இழப்பை இலக்காகக் கொண்டு தீவிர உடற்பயிற்சி, டயட் என மேற்கொவார்கள். ஆனால், அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாமல் விரைவில், கைவிட்டு விடுவார்கள். இதன் காரணமாக, உடலில்  மீண்டும் கொழுப்பு முன்பை விட மிக வேகமாக சேரத் தொடங்கும். உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம். இதில், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன குடிக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவு பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கொழுப்பைக் கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்து எடையைக் குறைக்க உதவுவதில் சில பானங்கள்  உங்களுக்கு பெரிதும் உதவும். இவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கூடுதல் கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும். 

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான 3 எடை இழப்பு பானங்கள்.

1. எலுமிச்சையுடன் சோம்பு நீர் (காலை உணவுக்குப் பிறகு) -  இது செரிமானத்திற்கு உதவுகிறது, எலுமிச்சை உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மெட்டபாலிஸத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது.

2. எலுமிச்சையுடன் கூடிய ஓமம் தண்ணீர் (மதிய உணவு நேரம்) - மதிய உணவின் போது செரிமானத்திற்கு உதவும் இந்த பானம், முழு பருப்பு வகைகள் போன்ற உணவுகளால் ஏற்படும் வாய்வுத் தொல்லையை நீக்குவதற்கும் உதவுகிறது.  ஓமம் செரிமானத்தை வலுப்படுத்துகிறது. உடல் எடையை இழக்க (Weight Loss Tips) செரிமானம் சிறப்பாக இருப்பது அவசியம்.

3. கெமோமில் டீ (இரவு உணவிற்கு பிறகு) - இயற்கையான தூக்கத்தைத் தூண்டும் அற்புதமான கெமோமில் டீ, செரிமானத்தை தூண்டுவதோடு, மனதிற்கு அமைதியை தருகிறது.  மன அழுத்தத்தை போக்கி, நிம்மதியான தூக்கத்தை தருகிறது. உடல் எடையைக் குறைக்க நலல் ஆழ்ந்த தூக்கம் மிக முக்கியம்.

மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

கிரீன் டீ,  சீரக நீர் மற்றும் அதிக புரதம் கொண்ட பானங்கள் போன்ற சில பானங்கள் வளர்சிதை மாற்றத்தை  அதிகரித்து, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியைக் குறைக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் போதுமானது. இது உடலுக்கு நீர் சத்து கொடுப்பதுடன் , வைட்டமின் சி வழங்குகிறது. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இதில் இஞ்சி சேர்ப்பது உடல் எடையை மேலும் குறைத்து ( Weight Loss) கூடுதல் பலனை தரும். இவை அனைத்தும் எடையைக் குறைக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொழுப்பை எரிக்க, உணவு மற்றும் பானங்களுடன் உடற்பயிற்சியும் சேர்ந்தால் வியக்கத்தக்க பலன் கிடைக்கும். ஆனால் உங்கள் உணவில் திரவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News