பருமனான ஆண்களே எச்சரிக்கை! உடற்பயிற்சி செய்யாவிட்டால் விபரீதம்!!

குழந்தைகள் இல்லாத ஆண்களுடன் ஒப்பிடுகையில், பருமனான இருக்கும் தந்தைக்கு சரியான ஊட்டச்சத்து தேவைப்படும், அது மட்டுமல்ல உடற்பயிற்சி செய்யவும் பரிந்துரைக்கப்படுவதாக   சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2020, 02:52 PM IST
  • பருமனான நோயாளிகளில் 20 முதல் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே எடை குறைப்பு ஆலோசனை கூறப்படுகிறது
  • பருமனான தந்தைகள் அன்பால் ஆரோக்கியம் பெறுவார்கள் என்று ஆச்சரியப்படுத்தும் ஆய்வு...
  • குழந்தையின் பராமரிப்பிற்காக தந்தைகள் செலவிடும் நேரம் அதிகரித்து இரட்டிப்பாகி உள்ளது
பருமனான ஆண்களே எச்சரிக்கை! உடற்பயிற்சி செய்யாவிட்டால் விபரீதம்!! title=

குழந்தைகள் இல்லாத ஆண்களுடன் ஒப்பிடுகையில், பருமனான இருக்கும் தந்தைக்கு சரியான ஊட்டச்சத்து தேவைப்படும், அது மட்டுமல்ல உடற்பயிற்சி செய்யவும் பரிந்துரைக்கப்படுவதாக   சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

Journal of Nutrition Education and Behaviour என்ற மருத்துவ சஞ்சிகையில் Elsevier ஆய்வின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.  UPMC Children`s Hospital of Pittsburghஇன் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக நர்சிங் பல்கலைக்கழகம் இணைந்து 2,562 ஆண்களை இந்த பரிசோதனைக்கு உட்படுத்தின.

பருமனான நோயாளிகளில் 20 முதல் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு ஆலோசனை கூறப்படுவதாக சொல்லும் பிற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

"குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது. ஆனால் அவர்கள் உடல் எடை தொடர்பான விஷயங்களில் கவனக்குறைவாக இருக்கிறார்கள், இது சுகாதாரத்தில் எதிரொலிக்கிறது" என்று இந்த ஆய்வினை முன்னெடுத்த UPMC Children`s Hospital of Pittsburghஇன் மருத்துவர் Alicia Boykin தெரிவிக்கிறார்.  எம்.டி., எம்.எஸ். பயின்று பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் பணியாற்றும்  அலிசியா பாய்கின், இளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதுவந்தோர் மருத்துவத் துறையில் தலைவராக இருக்கிறார்.

"ஏற்கனவே தந்தையாக இருக்கும் ஆண்களிடையே ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது, ஆனால் அதே அளவு இந்த விழிப்புணர்வை எதிர்காலத்தில் விரைவில் தந்தையாக மாறக்கூடிய ஆண்களிடையேயும் ஏற்படுத்த வேண்டியுள்ளது" என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Read Also | நடிகை ஷரீன் கஞ்சவாலாவின் கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்கள்

குழந்தைகள் மீதான தந்தையின் அர்ப்பணிப்பு அதிகரித்துள்ளது என்ற முந்தைய ஆராய்ச்சியை இந்த் ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. குழந்தையின் பராமரிப்பிற்காக தந்தைகள் செலவிடும் நேரம் அதிகரித்து இரட்டிப்பாகி உள்ளது. தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதிலும், , குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதற்கும் உதவும் எடைத் திட்டங்களில் தந்தைகள் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

"தந்தையாகும் போது ஆண்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளனர்" என்று டாக்டர் பாய்கின் கூறுகிறார். 

இந்த ஆய்வு ஆண்களுக்கான மருத்துவ வருகைகளின் போது எடை தொடர்பான நடைமுறைகள் மற்றும் மேலாண்மை குறித்த பொதுவான புரிதலை மேலும் மேம்படுத்துகிறது. "தந்தைவழி உடல் பருமன் மற்றும் குழந்தை உடல் பருமன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக் கூறினால், குடும்பத்திற்காக தந்தையாக இருக்கும் ஆண் அதை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே அவர்களின் நோய்க்கு அவர்களுடைய சுகாதார பழக்க வழக்கங்கள் ஆதாரமாகிறது என்பதை புரிந்துக் கொண்டால், மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபாக இருக்கும்.  குழந்தைகள், அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது தந்தையைப் பார்த்து உந்துதல்களைப் புரிந்துகொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

Trending News