தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட இரவில் இதை செய்தால் போதும்: சூப்பரா குறைக்கலாம்

Weight Loss Tips: தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய தூங்கும் முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2024, 10:48 AM IST
  • இரவு உணவை நாம் உட்கொள்ளும் நேரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
  • இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.
  • அசிடிட்டி பிரச்சனையும் ஏற்படலாம்.
தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட இரவில் இதை செய்தால் போதும்: சூப்பரா குறைக்கலாம்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இன்றைய காலத்தில் பலருக்கு உள்ளது. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கின்றது. எனினும் சில வாழ்க்கை முறைகளை மாற்றுவதன் மூலமும் சில ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமும், வீட்டு வைத்தியங்கள் மூலமும் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க (Weight Loss) மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

தொப்பை கொழுப்பு பிரச்சனை இல்லாதவர்களை தேடினால் இந்த காலத்தில் மிகச்சிலரே கிடைப்பார்கள் என்பது யதார்த்தமான உண்மை. நமது சில பழகவழகங்களை மாற்றிக்கொண்டாலே உடல் உப்பசத்தை (Obesity) குறைக்கலாம். நமது தினசரி வழக்கங்களும் உடல் பருமனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நாம் பின்பற்றும் வழக்கமான முறையும் நமது எடையை பாதிக்கிறது. 

தொப்பை கொழுப்பை குறைக்க

தொப்பையை குறைக்க, நமது வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன் நாம் செய்யும் சில செயல்கள் எடை இழப்பை பாதிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய தூங்கும் முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி (Night Routine) இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய இரவு நேர ரொட்டீன் (Night Routine For Weight Loss)

1. லேசான உணவு

இரவு நேரத்தில் மிகவும் லேசான உணவையே உட்கொள்ள வேண்டும். அதிக கனமான, அல்லது கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொண்டால், அது ஜீரணமாவதில் சிரமம் ஏற்படும். இரவு உணவை உட்கொண்ட பிறகு நமக்கு அதிக உடல் செயல்பாடுகள் இருப்பதில்லை என்பதால், உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும். ஆகையால் இரவில் லேசான உணவுகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.

2. உணவை மிகவும் தாமதமாக உண்ணாதீர்கள்

இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. இரவு உணவில் சத்தான விஷயங்களைச் சேர்ப்பது முக்கியம் என்றாலும், உடல் எடையைக் குறைக்க, எளிதில் ஜீரணிக்கக் கூடியவற்றை எப்போதும் உணவில் சேர்க்க வேண்டும். நீங்கள் உங்கள் தொப்பையை (Belly Fat) குறைக்க விரும்பினால், இரவில் சீக்கிரம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க | குக்கரில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா... கெட்டதா... முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

3. உணவின் அளவு மிக முக்கியம்

இரவு உணவின் அளவும் மிக முக்கியம். காலை உணவு, மதிய உணவு போலல்லாமல், இரவு உணவின் அளவு சற்று குறைவாக இருப்பது நல்லது. 

4. பானங்கள்

இரவு தூங்கும் முன், கிரீன் டீ அல்லது புதினா டீயை இரவில் குடிப்பது நல்லது. இவை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான பானங்கள் நமது செரிமான அமைப்புக்கும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

5. இரவு உணவு உட்கொள்ளும் நேரம்

இரவு உணவை நாம் உட்கொள்ளும் நேரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். அசிடிட்டி பிரச்சனையும் ஏற்படலாம். இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க விரும்பினால், இரவில் கண்டிப்பாக சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தபட்சம் 1-2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகவைத்தால் மட்டுமே முழு பலனையும் தரும் உணவுப்பொருட்கள்! பச்சையாக சாப்பிடக்கூடாதவை!

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News