இன்றைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான ஆண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு உணவு பழக்கங்களும், உடர்பயீற்சி என்பதே இல்லாத நிலையிலும் பலவிதமான பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் பாலியல் பிரச்சனைகள் குறித்து பேச அதிக தயக்கம் கொள்கிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். ஆம், தவறான உணவுகளை உட்கொள்வது குழந்தையின்மை பிரச்சனையை அதிகரிக்கும். ஏனெனில் தவறான உணவு உங்களின் உடலை நேரடியாக பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்கள் கருவுறுதலை அதிகரித்து உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.அத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இங்கு கூறுவோம்?
ஆண்கள் இன்றே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு மற்றும் சில பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை உட்கொள்வதால் ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. அதனால்தான் இன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உணவில் இருந்து விலக்க வேண்டியது அவசியம்.
இனிப்பு வகைகள்
இனிப்பு பொருட்களை தினமும் உட்கொள்வது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை அதிகரிக்கும். அதே நேரத்தில், இனிப்புப் பொருட்களை அதிகம் உட்கொள்வது விந்தணு எண்ணிக்கை குறைவதோடு பல நோய்களையும் ஏற்படுத்தும். அதனால் ஆண்கள் இனிப்புகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
அதிக உப்பு உள்ள உணவு பொருட்கள்
அதிக உப்பு உள்ள உணவுகள் ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும். அதில் உள்ள சோடியம் தான் அதற்கு காரணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தந்தையாக வேண்டும் என்று நினைத்தால், இன்றிலிருந்தே பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை உட்கொள்வதைக் குறையுங்கள்.
புகைபிடித்தல்
நீங்களும் சிகரெட் புகைப்பவராக இருந்தால், இன்றே அதனை கைவ்டவும். ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்க இது மிகப் முக்கிய காரணம் என்பதால் கவனமாக இருங்கள். புகைபிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் தினமும் சிகரெட் புகைத்தால், விந்தணு குறைவதோடு, அதன் தரமும் குறைகிறது. அதோடு நுரையீரலும் பெரும் பாதிப்பிற்குள்ளாகும்.
மதுப் பழக்கம்
ஆண்கள் தவறுதலாக கூட மது அருந்தக்கூடாது. ஏனெனில் மது அருந்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரத்தையும் குறைக்கிறது. மது பாலியல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கையத்தையே பாதிக்கிறது.
திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவரது திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போக்கும். திருமணமான ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் திருமண வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். பாலியல் பிரச்சனைகளால் திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போகும். எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு உணவு பழக்கங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ