உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்..!

Weight Loss Tips: நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? அப்போ இந்த பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2023, 04:48 PM IST
  • உடல் எடை குறைப்பில் உதவும் உணவுகள்.
  • ஜூஸாக குடிப்பதை விட அப்படியே பருகினால் நல்லது.
  • லிஸ்டில் என்னென்ன பழங்கள் உள்ளது?
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்..! title=

நம்மில் பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போம். அல்லது அந்த முயற்சியின் முதற்கட்டத்தில் இருப்போம். எதுவாக இருப்பினும், உடல் எடை குறைப்பிற்கு டயட் இருப்பது மிகவும் அவசியம். அப்படி டயட் இருக்கும் போது நாம் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்வோம். ஆனால் ஒரு சில பழங்கள்தான் நம் உடல் எடை குறைப்பிற்கு உதவும். அவை எந்தெந்த பழங்கள் தெரியுமா? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.

1. திராட்சை பழம்:

வெயிட் லாஸ் பயணத்தில் நமக்கு உற்ற துணையாக வரும் பழம், திராட்சை பழம். 123கிராம் எடையுள்ள திராட்சை பழத்தில் வெரும் 37 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் இவர் 51 சதவிகிதம் உங்கள் உடலுக்கு ஏற்ற வைட்டமின் c-ஐ அளிக்கும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இது இனிப்பான பழமாக இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரையின் அளவு உங்கள் ரத்தத்தில் கலக்க நேரம் எடுக்கும் இதனால், உங்கள் எடை அதிகரிக்காமல் இந்த பழம் பார்த்துக்கொள்ளும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் திராட்சை பழம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பயன்படும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | எடை குறைக்க சூப்பர் வழி: உணவில் இந்த மாற்றங்களை செய்தால் போதும்... உடனே குறையும்

2.ஆப்பிள்:

ஆப்பிள் பழத்தில் கொழுப்பின் அளவு குறைவாகவும் ஃபைபரின் அளவு அதிகமாகவும் இருக்கும். ஆப்பிள் பழத்தை ஜூஸ் போட்டு குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது  உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆப்பிள் பழத்தை நீங்கள் தினசரி சாப்பிடும் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக, இப்பழம் பெண்களுக்கு அதிக நன்மை பயக்குமாம். 

3.பெர்ரி பழங்கள்:

பெர்ரி பழத்தில் வைட்டமின் டி அளவு அதிகமாக உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பெர்ரி பழவகைகளில் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது, ஸ்ட்ராபெர்ரி. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் 50 கலோரிகள் வரை மட்டுமே உள்ளதாகவும் 3 கிராம் அளவிற்கு ஃபைபர் சத்துக்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்பழம் உங்கள் கொழுப்பின் அளவை குறைக்கவும் ரத்த அழுத்தத்தஹி கட்டுப்படுத்தவும் உதவுமாம். தயிர், சீரியல், ஓட்ஸ் போன்றவற்றை காலை உணவாக சாப்பிடும் போது ஸ்ட்ராபெர்ரியையும் சேர்த்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால், அதை ஸ்மூதியாகவும் குடிக்கலாம். 

4.கிவி பழங்கள்:

கிவி பழங்களில் விட்டமின் சி, விட்டமின் கே போன்ற பல முக்கிய வைட்டமின்கள் இருக்கின்றன. இவற்றை குறைவான அளவில் எடுத்துக்கொண்டால் கூட அதில் ஃபைபர் அளவு அதிகமாக இருக்குமம். இது உங்கள் உடலுக்கு நல்ல கொழுப்பை தரும். அந்த கொழுப்பு உங்கள் உடல் எடையை ஏற விடாமல் பார்த்துக்கொள்ளும். உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இந்த பழம் உதவலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இருப்பினும் உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் ஆகியவை இருந்தால் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரைக்கு பின்னர் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஸ்மூதியாக அரைத்து உங்கள் காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். 

5.ஆரஞ்சு பழங்கள்:

நீர் சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. இந்த பழத்தில் கொழுப்பின் அளவு குறைவு ஆனால் வைட்டமின் சி-யின் அளவு அதிகம். இதை பலர் ஜூஸாக சாப்பிடுவது வழக்கம். ஆனால், அப்படி சாப்பிடுவதற்கு பதிலாக அப்படியே முழு பழமாக எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு நன்மை பயக்கும் என மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க நினைத்தால், இதை உங்கள் டயட் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | குழந்தைகளின் உயரம் அதிகரிக்க... ‘இந்த’ சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News