மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, குறிப்பாக வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வர தொடங்கிவிடும். இது பொதுவான ஒன்று, சிறுவயதினர், பெரியவர் என அனைவருக்கும் இந்த மழைக்காலத்தில் உடல்ரீதியாக பல சிரமங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய குறைகளில் ஒன்றாக இருப்பது வயிறு உப்புசம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல வயிறு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். மருத்துவர்களும் பொதுவாக கூறுவது என்னவென்றால் தங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் வயிறு தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
பாட்னா மெடிக்கல் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 30% மக்கள் வயிறு கோளாறுக்கு சிகிச்சை பெற தான் வருவதாக தெரிவித்துள்ளது. அதில் வாயுத்தொல்லை, அசிடிட்டி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகளுடன் மக்கள் மருத்துவமனைக்கு வருவதாக கூறப்படுகிறது. அதனால் மருத்துவர்கள் மக்களுக்கு உணர்த்துவது என்னவென்றால், மழைக்காலங்களில் வெளியே விற்கும் உணவுகளை வாங்கி உண்ணுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை வயிற்றில் தொற்றை ஏற்படுத்தும் என்றும் மழைக்காலங்களில் முக்கியமான ஒன்று சுத்தமான தண்ணீர். நாம் பருகும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டுமென்றும், கொதிக்க வைத்து நீரை குடிக்குமாறும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் பழைய உணவுகளில் பூஞ்சை மற்றும் பேக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது, அதனால் புதிதாக சமைத்த உணவையே மக்கள் சாப்பிடுமாறு வலியுறுத்தப்படுகிறது. உதாரணமாக காலை வேலைக்கு செய்யப்பட்ட உணவை, மத்திய நேரத்திற்கு சாப்பிடக்கூடாது, அப்பொழுதே சமைத்து அப்பொழுதே சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பார்சல் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை இதுபோன்ற காலங்களில் தவிர்க்குமாறும் கூறப்படுகிறது. நாம் கவனமாக இல்லாவிட்டால் மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறு, டீஹைட்ரேஷன் போன்ற பல பிரச்சனைகள் உருவாகலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ