பிபி நோயாளிகளே.. இனி டென்ஷன் வேண்டாம் இந்த 3 பழங்கள் சாப்பிடுங்கள் போதும்

Foods For High BP Patient: உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​​​அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும், ஏனெனில் இதனால் பல கொடிய நோய்கள் உருவாகலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2024, 07:11 PM IST
  • இந்தப் பழங்கள் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • வாழைப்பழம் மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பழம் செயல்படுகிறது.
பிபி நோயாளிகளே.. இனி டென்ஷன் வேண்டாம் இந்த 3 பழங்கள் சாப்பிடுங்கள் போதும் title=

Fruits For High Blood Pressure: இன்றைய காலக்கட்டத்தில், மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணத்தால், உணவுப் பழக்கம், அன்றாட வழக்கத்தில் (Daily Routine) மாற்றம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது, சில சமயங்களில் புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை நமக்கு கொடிய நோயாக மாறுகிறது.

இந்தப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்:
உயர் இரத்த அழுத்தம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு கொடிய நோயாகும், அத்தகைய சூழ்நிலையில், பலர் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கு, இந்த இரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவை உங்களின் உயிருகக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், அதுமட்டுமின்றி இதனால் மூளையில் இரத்தக்கசிவு மற்றும் பக்கவாதமும் ஏற்படலாம். எனவே கட்டாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே சில பழங்களை உட்கொள்வதன் மூலம் உடலில் அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று உணவு நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

1. வாழைப்பழம் | Banana
வாழைப்பழம் மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாகும். இது செரிமானத்தை பலப்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்திற்கு (Blood Pressure) ஒரு மருந்தாக செயல்படுகின்றன, இதை தினமும் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது மற்றும் பக்கவாதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Reduce Body Heat Foods: உடல் சூடால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

2. கிவி | Kiwi
கிவி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும், இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல சத்தான கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த பழத்தில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது, இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பழம் செயல்படுகிறது.

3. மாம்பழம் |  Mango
கோடைக்காலத்தில் கிடைக்கும் அற்புத பழம் இதுவாகும், இதன் சுவைக்கு மட்டுமல்ல, பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மாம்பழத்தை உட்கொள்வது இரத்த அழுத்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இந்த இரண்டு கூறுகளும் பிபியைக் கட்டுப்படுத்த உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Health Risks Of Cold Water: ஜிலு ஜிலு ஐஸ் வாட்டரில் இருக்கும் அடக்கமுடியா பிரச்சனைகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News