எலும்புகளை சல்லடையாய் துளைக்கும் ஆஸ்டியோபரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை!

Bone Health & Osteoporosis:இன்றைய கால கட்டத்தில், மூட்டு வலி கழுத்து வலி போன்றவை, வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் காக்கும் ஒரு மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் எலும்புகள் வலுவாக இல்லாதது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 27, 2023, 05:21 PM IST
  • பெண்களுக்கு எலும்பு திசுக்களின் அடர்த்தி என்பது ஆண்களை விட குறைவாக இருப்பது தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம்.
  • கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணும் அதே நேரத்தில், உணவில் இருந்து கால்சியத்தை உறிஞ்சக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
எலும்புகளை சல்லடையாய் துளைக்கும் ஆஸ்டியோபரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை! title=

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, மூட்டு வலி கழுத்து வலி போன்றவை, வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் காக்கும் ஒரு மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் எலும்புகள் வலுவாக இல்லாதது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக அளவு எலும்பு பலவீனம் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. எலும்பு பலவீனமடைந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு மிதிதல் அல்லது எலும்பு அடர்த்தி குறைதல், எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பொதுவாகவே பெண்களுக்கு எலும்பு திசுக்களின் அடர்த்தி என்பது ஆண்களை விட குறைவாக இருப்பது தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம். அதோடு, வயது ஆக ஆக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனின் அளவு குறைவதும் எலும்பு பலவீனத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

கால்சியம்

எலும்பு பலவீனம் அடையாமல் இருக்க உடலில் கால்சியம் சத்து ஆனாலும் இருப்பது மிக அவசியம். மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள போதுமான அளவு வைட்டமின் டி யும் தேவை. வைட்டமின் டி யை பெற, காலை சூரியன் ஒளி உடலில் படும்படி உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்வது அவசியம். பொதுவாகவே எலும்பு வலுவாக இருக்க உடற்பயிற்சி நிச்சயம் தேவை. 

மேலும் படிக்க | முதுகெலும்பு பிரச்சனைகளை தீர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தூக்கம்

உணவு பழக்கம்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் நிறைந்த பால் பால் பொருட்கள், புரோக்கலி, உலர் பழங்கள், கேழ்வரகு என்னும் ராகி, ஆரஞ்சு மீன் உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணும் அதே நேரத்தில், உணவில் இருந்து கால்சியத்தை உறிஞ்சக்கூடிய, சூடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள், அதிக உப்பு, மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காபி டீ அதிகமாக குடிப்பதும் எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். தினமும் ஆல்கஹால் உட்கொள்வது கால்சியத்தை உறிஞ்சி, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். அதே போன்று, அதிகப்படியான புரதம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு புரதம் முக்கியமானது என்றாலும், அதிகப்படியான புரதம், சிறுநீர் மூலம் கால்சியம் சத்துக்கள் வெளியேற வழிவகுக்கும். 

உடற்பயிற்சி

எலும்புகளை வலுவாக வைத்திருக்க, வாரத்திற்கு குறைந்தது 4 நாட்கள் சுமார் 30 - 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்கள் எலும்புகளையும் தசைகளையும் வலுவாக வைக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் மிதமான உடற்பயிற்சி போதுமானது. கழுத்து வலி, தோள் வலி வராமல், எலும்புகளை வலுவாக வைக்க நீங்கள் சரியான நிலையில் உட்காருவதும் அவசியம். உட்கார்ந்திருக்கும் போது இடுப்பை நேராக செங்குத்தாக வைத்து, தொப்புளை உள்நோக்கி வைத்து, தோள்களை தளர்வான நிலையில் வைத்துக் கொண்டு உட்கார வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பீட்ரூட் கீரையை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்தால், யூரிக் அமில பிரச்சனை காலி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News