நாட்டில் முதல் முறையாக ஒரு நாளைக்கு 3.79 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3645 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இன்று, இந்தியாவில் தொடர்ச்சியாக 8 வது நாளாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரை, 28 கோடியே 44 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 17 லட்சம் பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது. அதில் 21 சதவீதத்திற்கும் மேலானோருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 3645 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், 2,69,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை, நாட்டில் 360,960 புதிய பாதிப்புகள் பதிவாகின
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, புதிய கொரோனா வழக்குகள் 8,635 பதிவான நிலையில், தற்போது அதன் அளவு உச்சத்தை தொட்டுள்ளது
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
மொத்த கொரோனா பாதிப்புகள் - 1,83,76,524
குணம்டைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை - 1,50,86,878
மொத்த செயலில் உள்ள வழக்குகள் - 30,84,814
மொத்த இறப்பு எண்ணிக்கை - 2,04,832
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை- 15,00.20,648
மகாராஷ்டிராவில்,புதிய தொற்று பாதிப்புகள், 63,309. இதை அடுத்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,73,394 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 67,214 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 61,181 நோயாளிகள் குண்மடைந்தனர்.
டெல்லியில் புதன்கிழமை, புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 25,986, அதே நேரத்தில் 368 நோயாளிகள் தொற்று காரணமாக இறந்தனர். தலைநகரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 10,53,701 ஆக உயர்ந்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 14,616 ஐ எட்டியுள்ளது.
கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான பணி ஜனவரி 16 முதல் தேதி நாட்டில் தொடங்கியது. ஏப்ரல் 28 வரை, நாடு முழுவதும் 15 கோடி 20 ஆயிரம் 648 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13 அன்று தொடங்கியது. ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இப்போது மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
நாட்டில் கொரோனாவின் இறப்பு விகிதம் 1.12 சதவீதமாகவும், குண்மடையும் விகிதம் 82 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா ஆக்டிவ் பாதிப்புகள் எண்ணிக்கையில், இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ALSO READ | PM Cares நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க மத்திய அரசு உத்தரவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR