நாம் சோர்வாக இருந்தாலும், வேலையின்போது தூக்கம் வருவதுபோல உணர்ந்தாலும், உடனடியாக காபி குடிக்க பரிந்துரைப்பார்கள். ஆனால் காபி மட்டும் தான் உங்களை உற்சாகமாக உணர வைக்கும் உலகின் ஒரே பானம் அல்ல.
காஃபின் தூக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, ஆனால் அது மட்டுமே உடனடியாக உற்சாகத்தைத் தூண்டும் மருந்து அல்ல. உங்களுக்குள் கூடுதல் ஆற்றலை செலுத்தி, சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் ஏராளமான உணவுகள் உள்ளன. அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே.
ஓட்ஸ்
ஓட்ஸ் அதன் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் காரணமாக ஆற்றலை அளிக்கிறது. செரோடோனின் உற்பத்தியையும் ஓட்ஸ் அதிகரிக்கிறது, இது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் கற்றல் மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.
சந்தையில் கிடைக்கும் சுவையுள்ள அல்லது சர்க்கரை ஓட்ஸைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதற்குப் பதிலாக, பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் மேப்பிள் அல்லது தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சத்தான காலை உணவை சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
வாழைப்பழங்கள்
எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சுவையான, வாழைப்பழங்கள் அனைவருக்கும் ஏற்ற சரியான உணவாகும், நாள் முழுவதும் இன்னும் கொஞ்சம் ஆற்றல் தேவை என்று உணர்ந்தால் அதற்கு எளிமையான வழி வாழைப்பழம் சாப்பிடுவது தான்.
உடற்பயிற்சிக்கு முன்பும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள வாழைப்பழத்தில் சிறிதளவு புரதச்சத்தும் உள்ளது.
தண்ணீர்
நீரிழப்பு உங்களை சோர்வடையச் செய்து, மூளையையும் மந்தமாக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சோர்வாக உணர்ந்தால், உடனே தண்ணீர் அருந்தவும். சக்திவாய்ந்த பானமான நீர், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாமலேயே தடுக்கிறது.
மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் சூப்பர் உணவுகள்
மீன்கள்
வைட்டமின் பி 12 இன் சிறந்த மூலம் மீன். நாள் முழுவதும் நீடிக்க கூடுதல் ஆற்றலை வழங்கும் மீன்களில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி செலினியம், புரதம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன.
இது உற்சாகமாக உணரச் செய்ய உதவுகிறது, கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது மனச்சோர்வு, நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். கொழுப்பு நிறைந்த மீன்களை உண்ணத் தொடங்க இதைத் தவிர வேறு காரணங்கள் வேண்டுமா?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இயற்கையால் வழங்கப்படும் சரியான கார்போஹைட்ரேட்டுகளில் ஒன்றான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, எளிதில் ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ + சி, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உடல் மற்றும் மூளையை உற்சாகமாக வைத்திருக்கும்.
இதில் உள்ள நிறைந்த நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது, உடலுக்கு நிலையான எரிபொருள் மற்றும் ஆற்றலை வழங்குகிறது.
முட்டைகள்
முட்டைகளில் புரதம் அதிகமாக உள்ளது. இது, நிலையான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. பல்வேறு வழிகளில் ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ள அமினோ அமிலமான லூசின் முட்டையில் உள்ளது.
அதிக இரத்த சர்க்கரையை உறிஞ்சுவதற்கு செல்களுக்கு உதவும் முட்டை, செல் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான கொழுப்பு முறிவை அதிகரிக்கிறது. முட்டையில் பி வைட்டமின்கள் அதிகமாக உள்ளன, இது உணவை ஆற்றலாக மாற்றுவதில் என்சைம்களின் செயல்பாடுகளில் உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR