எகிறும் சுகர் அளவை கட்டுப்படுத்த... இன்சுலினை சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி!

Insulin Plant in Diabetes Control: நீரிழிவு நோயை அகற்றும் சக்தி கொண்ட பல தாவரங்கள் பற்றி ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இன்சுலின் செடி. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2024, 05:27 PM IST
  • இன்சுலின் நன்றாக சுரப்பதால் சர்க்கரையை உடனடியாகக் கட்டுப்படுத்துகிறது.
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தாவரங்கள் மற்றும் இலைகள்.
  • சீனித்துளசி இலைகளில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம்.
எகிறும் சுகர் அளவை கட்டுப்படுத்த... இன்சுலினை சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி! title=

Insulin Plant in Diabetes Control: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே,  நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இது ஒரு வாழ்க்கை முறை சார்ந்த நோய் என்பதால், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேதம் உள்ள பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்துவதாக கூறுகின்றன. நீரிழிவு நோயை அகற்றும் சக்தி கொண்ட பல தாவரங்கள் பற்றி ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இன்சுலின் செடி. 

சாதாரண மக்களில், இன்சுலின் நன்றாக சுரப்பதால் சர்க்கரையை (Diabetes Control) உடனடியாகக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகளில், இன்சுலின் செயல்படாததால் சர்க்கரை  அளவு அதிகரிக்கிறது.  இந்நிலையில், இன்சுலின் அளவை இயற்கையாக அதிகரித்து, நீரிழிவு நோயாளுக்கு அருமந்தாக இருக்கும் இன்சுலின் செடியை பற்றி அறிந்து கொள்ளலாம். இயற்கையான இன்சுலினைப் போலவே இரத்தத்தில் செயல்படுவதால் இந்த செடிக்கு இன்சுலின் என்று பெயரிடப்பட்டது. 

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தாவரங்கள் மற்றும் இலைகள்

இன்சுலின் செடி: மருத்துவ மொழியில் இது காஸ்டஸ் இக்னியஸ் (castus igneus) என்று அழைக்கப்படுகிறது. இந்த செடியின் இலைகளை சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் இன்சுலின் செடியின் இலைகள் உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நிழலில் உலர்த்தி பொடி செய்து இந்த பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | பூண்டு சாப்பிடுங்க!! செரிமானம், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா... இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

இன்சுலின் செடியை தவிர, வேறு சில தாவரங்கள் குறித்தும், ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன

சீனித்துளசி (ஸ்டீவியா) : ஸ்டீவியா எனப்படும் சீனித்துளசி இலைகளில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம் உள்ளது.  சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்றாக கருதப்படுகிறது.  உடல் பருமனை குறைக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட இயற்கை இனிப்பானாக, தற்போது ஸ்டீவியா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு பூஜ்ஜியம் என்ற அளவில் இருக்கிறது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது.  ஆனால், சினி துளாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், ஸ்டீவியா கலந்த இனிப்பு மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர் நிபுணர்கள்.  இந்த இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.  உடல் பருமனை குறைக்கவும் ஸ்டீவியா உதவுகிறது. 

கற்றாழை: கற்றாழையின் அதிசய  மருத்துவ குணங்கள் நம் அனைவருக்கும் தெரியும். கற்றாழை சருமத்தையும் கூந்தலையும் பளபளப்பாகவும், பட்டுப் போலவும் வைக்க உதவுகிறது. கற்றாழை பல வகையான தோல் ஒவ்வாமை மற்றும் சூரிய ஒளியில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், கற்றாழை சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கற்றாழை சாறு நீரிழிவு நோயைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு காரணமான உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தையும் இது குறைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகவேகமா உடல் எடையை குறைக்க இந்த டிப்ஸ் கண்டிப்பா உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News