Stomach Pain : வயிற்றின் எந்தப் பக்கம் வலிக்கிறது? இந்த பாதிப்பாக இருக்கலாம்..!

வயிற்று வலி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்தால், அதற்கேற்ப அதனுடைய பாதிப்பையும் அறிந்து கொள்ளலாம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2023, 08:03 PM IST
Stomach Pain : வயிற்றின் எந்தப் பக்கம் வலிக்கிறது? இந்த பாதிப்பாக இருக்கலாம்..! title=

வெளியில் எதையாவது சாப்பிட்டாலோ அல்லது அஜீரணம் ஏற்பட்டாலோ வயிற்று வலி வரும். ஆனால் வெளியில் எதுவும் சாப்பிடாவிட்டாலும் அடிக்கடி வயிறு வலிக்கும். அப்படி வலிக்கும்போது உடனே அது வாயு அல்லது அஜீரணம் என்று சொல்லி சிகிச்சை செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. வயிற்றில் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ... அதற்கு ஏற்ப அதன் பாதிப்பும் இருக்கும். 

அதனை சரியாக கணித்து சிகிச்சை அளிப்பது மட்டுமே சாலச் சிறந்தது. வயிற்று வலி பல நோய்களின் பொதுவான அறிகுறி. ஆனால் வலி உணரப்படும் வயிற்றின் பகுதியைப் பொறுத்து, தொடர்புடைய நோயின் சில அறிகுறிகளைக் காணலாம். 

மேலும் படிக்க | மலச்சிக்கலில் இருந்து நிரந்தர தீர்வு பெற வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும் 

வலது பக்கம்
வலது பக்கத்தில் வலி முக்கியமாக குடல் அழற்சியைக் குறிக்கிறது. பெண்களுக்கு கீழ் பகுதியில் ஏற்படும் வலி கருப்பை வலியைக் குறிக்கிறது.

இடது பக்கம் 

அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி சிறுநீரக கல் பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே சரியான நேரத்தில் பரிசோதனை செய்து அதை கண்டறியவும்.

நடுவில் வலி

வயிற்றின் நடுவில் உள்ள வலி புண்கள் அல்லது இரைப்பை பிரச்சனைகளில் காணப்படுகிறது. வலி அதிகமாகும் முன் மருத்துவரை அணுகவும்.

மேல் வயிறு

இந்த பகுதியில் வலி அமிலத்தன்மையின் அறிகுறியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் சாப்பிடுங்கள் அல்லது ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுங்கள். இந்த வீட்டு வைத்தியம் வலியைக் குறைக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அடி வயிறு

இந்த பகுதியில் வலி சிறுநீர்ப்பை தொற்று அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் (UTI) அறிகுறியாகும். சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் கூட இந்த பகுதியில் வலியை உணர்கிறார்கள்.

(பொறுப்பு துறப்பு;  இந்த ஆலோசனை ஆரம்ப தகவல்களுக்கு மட்டுமே. எனவே மருத்துவ ஆலோசனை இல்லாமல் நேரடியாக சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும். எந்தவொரு உடல் வலியையும் புறக்கணித்து சுய மருந்து செய்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது) 

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News