துப்பாக்கியை தாறுமாறாக கையாண்ட ஆண்; ஆண்குறியை பதம் பார்த்த GUN...

கைத்துப்பாக்கியை தவறாக கையாண்டதன் விளைவாக தனது ஆண்குறியை தானே சுட்டுக் கொண்ட அசம்பாவித சம்பவம் இண்டியானாவில் நிகழ்ந்துள்ளது!!

Updated: Mar 10, 2019, 01:20 PM IST
துப்பாக்கியை தாறுமாறாக கையாண்ட ஆண்; ஆண்குறியை பதம் பார்த்த GUN...
Representational Image

கைத்துப்பாக்கியை தவறாக கையாண்டதன் விளைவாக தனது ஆண்குறியை தானே சுட்டுக் கொண்ட அசம்பாவித சம்பவம் இண்டியானாவில் நிகழ்ந்துள்ளது!!

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. அதில் சில நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் உண்டு. சிரிப்பையும் வரவைக்கும். தற்போது இண்டியானாவை சேர்ந்த ஒரு நபர் செய்த செயல் நமக்கு இரண்டையும் கொடுத்துள்ளது. இண்டியானாவை சேர்ந்த நபர், ஒருவர் தாறுமாறாக துப்பாக்கியை கையாண்டதின் விளைவு, அவருடைய ஆண்குறியையே அது பதம் பார்த்துள்ளது.

இண்டியானாவை சேர்ந்த 46 வயது நபர் மார்க் ஆண்டனி ஜோன்ஸ், தனது காலை நேர நடைபயிற்சியின் போது, வழக்கமாக தான் எடுத்துச் செல்லும் 9எம் எம் கைத்துப்பாக்கி தனது இடுப்புப் பகுதியில் இருந்து கீழே விழ பார்த்துள்ளது. அதனை கீழே விழாமல் தடுக்க நினைத்த போது அவரது கை எதிர்பாராதவிதமாக ட்ரிகரில் பட்டு அவரது ஆண் குறியை பதம் பார்த்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மரியன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் பிழைத்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தகவலை ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கைத்துப்பாக்கி உரிமம் பெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது. உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருப்பதை அறிந்த போலீசார், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.