சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விதைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலர், ஏன் அனைவரும் என்று கூட சொல்லலாம்... பழத்தை சாப்பிட்டதும் , அதன் விதிகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.
அதனால் அடுத்த முறை எந்த காய்கறி விதைகளை வீசும் முன், சற்று யோசியுங்கள். சில பழ விதைகள் மிகவும் சத்தானவை என்பதோடு, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளதாக நம்பப்படுகிறது.
அவற்றில் போதுமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இதன் காரணமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே குப்பைத் தொட்டியில் வீசுவதற்குப் பதிலாக அதனை பயன்படுத்தலாம். அது குறித்த விபரங்களை இன்று அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!
பூசணி விதைகள்
பெரும்பாலானோர் பூசணி விதைகளை வீசி விடுகிறார்கள், ஆனால் இந்த விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் மிகச் சிறந்த அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. பூசணி விதைகளை பச்சையாகவே சாப்பிடலாம், ஆனால் வறுத்த விதைகள் இன்னும் சுவையாக இருக்கும்.
பப்பாளி விதைகளும் அதிக பயன் தரும்
இது தவிர, பப்பாளி விதைகளும் அதிக பயன் தரும். பப்பாளி விதைகள் பல நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாக நம்பப்படுகிறது. இந்த விதை பல நோய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அபாயத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. பப்பாளி விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. பப்பாளி விதைகளை பச்சையாகவே சாப்பிடலாம். ஆனால் அவை கடுமையான வாசனை கொண்டது என்பதால் உண்ணும் போது சற்று கவனமாக இருக்கவும்.
இதயத்தை வலுவாக்கும் புளி விதை
இது தவிர, புளி விதைகளும் உங்களுக்கு நல்லது. இந்த விதைகள் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் பற்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இவற்றை சாப்பிடுவதால் தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் மிக குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR