கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, கேரளாவில் ஒருவர் 18 நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டதாக ''நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி'' தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் எங்கும் பரவவில்லை. இந்திய சுகாதாரத்துறை மிகவும் கவனமாக இந்த வைரஸ் பாதிப்பை கவனித்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்..! கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என்றார் எனினும், கவனமாக இருப்பது நல்லது.
At least nine people have died in #Kerala's #Calicut district due to high fever. The #healthdepartment of the state has confirmed that two out of the nine deceased were affected with the rare #Nipahvirus.
Read @ANI Story | https://t.co/JjYag6q0W0 pic.twitter.com/xMmf7s9O7o
— ANI Digital (@ani_digital) May 21, 2018