Benefits of No Sugar Challenge: இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இது அளவுக்கு அதிகமாக நம் உடலில் சேர்ந்தால் பல பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகிறோம். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு உடல் பருமனும் அதிகமாகிறது. சர்க்கரை பல்வேறு இனிப்புகள், உணவுகள் மற்றும் பானங்களை இனிமையாக்க பயன்படுகிறது. இது உணவு தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. கேக், பிஸ்கட், சாக்லேட் மற்றும் பிற ருசியான உணவுகளின் தயாரிப்பிலும் சர்க்கரை பயன்படுத்தப்படுகின்றது.
நமது உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நம்மை இந்நாட்களில் பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. உணவுமுறையில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இவற்றில் பல நோய்களை நாம் தவிர்க்கலாம். இதில் முக்கியமானது சர்க்கரை கட்டுப்பாடு. சில நாட்களுக்கு சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் பல வித உடன் நல ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும்.
14 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் இதோ
1. இதய ஆரோக்கியம்
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தும். இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
2. எடை இழப்பு
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கும். எடையைக் குறைக்கவும் பராமரிக்கவும் குறைந்த சர்க்கரை கொண்ட உணவு உதவியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைகக் நினைப்பவர்கள் 14 நாட்களுக்கு நோ சுகர் சேலஞ்சை செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் ‘சில’ உணவுகள்... எச்சரிக்கையா இருங்க!
3. இரத்த சர்க்கரை அளவு
சர்க்கரை உட்கொள்ளல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டிப்பாக அதிகரிக்கும். உங்களுக்கு நீரிழிவு நோய், அல்லது ப்ரீ-டயாபடீஸ் இருந்தால், 14 நாட்களுக்கு சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
4. பல் ஆரோக்கியம்
அதிக சர்க்கரை பல் ஆரோக்கியத்தை குலைக்கிறது. இது பல் சிதைவை ஏற்படுத்தும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது பல் சொத்தை மற்றும் ஈறுகளின் நோய்களுக்கான அபாயத்தைக் குறைக்க உதவும்.
5. ஆற்றல் அதிகரிப்பு
சர்க்கரை உட்கொள்ளல் ஆற்றல் மட்டங்களில் திடீர் உயர்வு மற்றும் திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது ஆற்றல் அளவை சீராக வைத்து சோர்வைக் குறைக்க உதவும். இது மனநிலையையும் மேம்படுத்தும்.
6. மன ஆரோக்கியம்
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. சக்கரை உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் மனநிலையையும் மேம்படுத்தலாம்.
7. சரும ஆரோக்கியம்
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால், அரும ஆரோக்கியம் மேம்பட்டு, இளவயதிலேயே முதுமையான தோற்றம் வரக்கூடும். இது முகப்பருக்களுக்கும் வழிவகுக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது சருமத்தின் பளபளப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, முகப்பரு பிரச்சனைகளையும் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... காரணங்களும்.. அதன் ‘ஆபத்தான’ அறிகுறிகளும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ