பகீர் தகவல்: ஒமிக்ரான் குழந்தைகளுக்கு நுரையீரல், இதய பாதிப்பை ஏற்படுத்தலாம்

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் தொற்று நோய் தீவிரமாக இருந்தால், இதயம் செயலிழக்க கூடும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2022, 05:11 PM IST
  • நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம்.
  • குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
பகீர் தகவல்: ஒமிக்ரான் குழந்தைகளுக்கு நுரையீரல், இதய பாதிப்பை ஏற்படுத்தலாம் title=

சீனா உட்பட உலகெங்கிலும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரிக்க முக்கிய காரணமான கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு, குழந்தைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகையில் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் தொற்று நோய் தீவிரமாக இருந்தால், இதயம் செயலிழக்க கூடும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நுரையீரலின் மேல் சுவாசக் குழாய் பாதையில் தொற்று குறிப்பாக குரூப் (Croup) என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு SARS-CoV-2 நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18,849 குழந்தைகளை பரிசோதித்தது.

ஜமா பீடியாட்ரிக்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் ஓமிக்ரான் அதிக அளவில் பரவிய போது மேல் சுவாசக் குழாயின் தொற்று அதிகரித்ததைக் காட்டியது. அமெரிக்காவில் SARS-CoV-2 மற்றும் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடுமையான தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள்

மேலும் படிக்க | அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

குரூப் (Croup) என்பது ஒரு வகை சுவாச நோயாகும், இது மருத்துவ ரீதியாக லாரன்கோட்ராசிடிஸ் என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளை பாதிக்கிறது. ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட சுமார் 384 பேருக்கு மேல் சுவாசப்பாதை தொற்று இருந்தது. 

கடந்த ஆண்டு நவம்பரில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை மாறுபாடு விரைவில் உலகளவில் பரவி, டெல்டாவை விட தீவிரமான தொற்றாக உருவெடுத்தது. டிசம்பர் 25ல் முடிவடைந்த வாரத்தில் இது அமெரிக்காவில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியது.

ஓமிக்ரான் மற்றும் அதன் வகைகள்

டெல்டா (பி.1.617.2) மாறுபாட்டை விட கொரோனா வைரஸின் மாறுபாடான ஓமைக்ரான் குறைந்த தீவிரத்தன்மை கொண்ட நோயை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும், மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் மத்தியில், கடுமையான கோவிட்-19 மற்றும் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் உள்ளிட்ட கடுமையான நோய்களை SARS-CoV-2 ஏற்படுத்தும் என்று குழு விளக்கியது.

ஒமிக்ரான் மாறுபாடு ஜனவரி தொடக்கத்தில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News