கொலஸ்ட்ராலுக்கான ஹெல்த் டிப்ஸ்: கொலஸ்ட்ரால் பிரச்சனை 50 வயதிலிருந்தே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகரிக்கத் தொடங்குகிறது. இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நமது உடல் ஆரோக்கியத்தில் பல வித சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சமச்சீரற்ற உணவின் காரணமாக கொலஸ்ட்ரால் பெரும்பாலும் அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் பல நோய்களை உண்டாக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், அதன் காரணமாக மாரடைப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு நாம் பலியாகலாம். ஆகையால், உடலில் உள்ள அதிக கொழுப்பின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் ஒரு வகையான வேர் வகையாகும். மக்கள் சாலட் வடிவில் இதை சாப்பிடுகிறார்கள். சருமத்தை பளபளப்பாக மாற்றவும் இது பயன்படுகிறது. பீட்ரூட் ஜூஸை தினமும் உட்கொள்வதன் மூலம் நமது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். இந்த சாற்றை உட்கொள்வதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஏற்படாது. ஏனெனில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பல வகையான பண்புகள் இதில் காணப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும்.
மேலும் படிக்க | எலும்புகளை வலுவாக்கும் ‘இந்த’ ஜூஸ்கள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்
பாகற்காய் சாறு
பாகற்காய் ஒரு ஆரோக்கியமான காயாகும். சிலர் இதை விரும்பி சாப்பிடுவார்கள், சிலர் விரும்ப மாட்டார்கள். பாகற்காயில் பல கூறுகள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ ஆகியவை அதிகம் உள்ளன. தோல் பளபளப்பாக இருப்பதற்காக மக்கள் இதை உட்கொள்வார்கள். உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும்.
சுரைக்காய் சாறு
சுரைக்காயை நாம் உணவில் அடிக்கடி உட்கொள்வதுண்டு. நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பல கூறுகள் இவற்றில் உள்ளன. சுரைக்காயில் 98% நீர் உள்ளது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த சுரைக்காய் மிகவும் உதவியாக உள்ளது. சுரைக்காய் சாறு குடிப்பதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. இதனை தினமும் உட்கொள்வதால், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதாவது, இதன் மூலம் கொலஸ்ட்ராலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
கற்றாழை சாறு
கற்றாழை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குடிப்பதற்கு சற்று கசப்பாகத் இருந்தாலும், கற்றாழை சாறு மட்டுமே பல நோய்களைக் குணப்படுத்த போதுமானது. இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளான ஃபேஸ் ஜெல், ஃபேஸ் வாஷ், அலோ வேரா பேக்கேஜ் ஜூஸ் போன்றவற்றை தயாரிக்க கற்றாழையை பயன்படுத்துகின்றன. அதன் நுகர்வு மூலம், நீங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். கற்றாழை உடலின் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | காபி: சுவைத்தால் ருசி ஆனால் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ