அதிக புரதம், குறைவான கொழுப்பு: எடை இழப்புக்கு ஏற்ற சூப்பர் உணவுகள் இவைதான்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். எடை இழப்பு முயற்சியில் ஈடுபடுள்ளவர்கள் உட்கொள்ளக்கூடிய சில புரதச்சத்து நிறைந்த உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2024, 11:24 AM IST
  • எடை இழப்பு முயற்சியில் புரதச்சத்தின் பயன்பாடு மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
  • புரோட்டீன் நிறைந்த உணவுகள் உடலுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கின்றன.
  • தசைகளை உருவாக்கவும் புரதம் உதவுகிறது.
அதிக புரதம், குறைவான கொழுப்பு: எடை இழப்புக்கு ஏற்ற சூப்பர் உணவுகள் இவைதான் title=

Weight Loss Tips: உடல் பருமன் என்பது உலகில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் எடையை குறைக்கலாம் என்ற சிந்தனையிலேயே பலர் உள்ளனர். நம் உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் அதிகப்படியான கவனம் இருக்க வேண்டும். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சனையும் இந்நாட்களில் மிக அதிகமாக உள்ளது. நாம் தினசரி உணவில் சில மாற்றங்களை செய்தே தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்கலாம் (Weight Loss). அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்பு முயற்சியில் புரதச்சத்தின் பயன்பாடு மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. புரோட்டீன் நிறைந்த உணவுகள் உடலுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கின்றன. தசைகளை உருவாக்கவும் புரதம் உதவுகிறது. உடல் எடையை குறைக்க புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். எடை இழப்பு முயற்சியில் ஈடுபடுள்ளவர்கள் உட்கொள்ளக்கூடிய சில புரதச்சத்து நிறைந்த உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

தயிர்

தயிர் ஒரு புரோபயாடிக் ஆகும். தினமும் தயிர் உட்கொள்வதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது. இது ஆரோக்கியமான குடலை உறுதிப்படுத்த உதவுகிறது. இது புரதத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் தயிர் சாப்பிடலாம். எனினும், சுவையூட்டப்பட்ட தயிரில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. தயிர் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நம்மை சுறுசுறுப்பாகவும் வைக்கிறது. 

முட்டை

முட்டை புரதம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்புள்ள முடையை எடை இழப்பு உணவில் சேர்க்கலாம். இது காலை உணவுக்கு மிக ஏற்றதாக கருதப்படுகின்றது. 

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் தாவர புரதத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகின்றன. தால், கூட்டு, சாம்பார், என பல வகையான உணவு வகைகளில் இவற்றை சேர்க்கலாம். இவற்றில் புரதச்சத்துடன்  நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது. இது எடை இழப்புக்கு உதவும்.

மேலும் படிக்க | இறைச்சி, மீன் சாப்பிட்டாலும் எலும்புகள் வலிமை பெறாது! இந்த 2 பொருட்கள் போதும்

குயினோவா

குயினோவா தாவர புரதத்தின் மற்றொரு சிறந்த மூலமாகும். புரதச்சத்து அதிகம் உள்ள குயினோவா சாலட் ஆரொக்கியமான காலை உணவாக கருதப்படுகின்றது. இது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும். 

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் புரதச்சத்து மட்டுமல்ல நார்ச்சத்தும், இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெயிலில் அலைந்து குளிச்சதும் இதை செய்யவே செய்யாதீங்க... தோல் மருத்துவரின் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News