செல்போன் உபயோகித்தால் ஸ்கின் கேன்சர் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு!

Skin damage: மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை அதிகம் உபயோகித்தால் கண்களில் பிரச்சனை வரும் என கேள்வி பட்டிருப்போம்.  ஆனால் இது போன்ற டெக்னாலஜி பொருட்களால் நமது சருமமும் பாதிப்படையலாம் இதனால் ஸ்கின் கேன்சர் கூட வரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 04:24 PM IST
  • செல்போன் உபயோகிப்பதால் சரும புற்றுநோய் வர வாய்ப்பு.
  • செல்போனில் யு ஏ வி கதிர்கள் அதிகம் உள்ளன.
  • செல்போனை இருட்டில் பயன்படுத்த வேண்டாம்,
செல்போன் உபயோகித்தால் ஸ்கின் கேன்சர் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு!  title=

வெயிலில் செல்கையில் சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்வது, வறண்ட சருமத்தை பிடித்த கிரீம் போட்டு சரி செய்வது என நாம் சருமத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருப்போம். ஆனால் அவையெல்லாம் செல்போன் பயன்படுத்தும் சில நொடிகளிலேயே அவை பயனளிக்காமல் போவதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

செல்போன் கதிர்களால் ஆபத்து..

பலருக்கு சரும புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருப்பது, சூரியனிலிருந்து வரும் யூ வி கதிர்கள்தான். இது நம் சருமத்தில் உள்ள டி என் ஏ செல்களை சிதிலமடைய செய்கின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் யூ வி கதிர்கள் போலவே நாம் பயன்படுத்தும் செல்போனில் இருந்தும் யூ வி பி கதிர்கள் வெளியேறுவதாக சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி தோல் நோய் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளதாம். இதை தவிர்ப்பதற்கு தோல் நோய் மருத்துவர்கள் சிலர் சிலர் சிம்பிள் டிப்ஸ் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | பெண்களின் கவனத்திற்கு! 30+ வயதா... கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை!

சருமத்தை எப்படி பாதுகாப்பது?

நமது சருமம் எப்போதுமே மிருதுவாக இருக்கும். அது ஸ்கிரீனிலிருந்து வெளிப்படும் ப்ளூ லைட் எனும் யுஏவி கதிர்களால் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க கண்டிப்பாக உங்கள் ஸ்கிரீன் டைமை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைக்க முடியாத பட்சத்தில் சில டிப்ஸ்களை பின்பற்றலாம் அவற்றில் சில. 

-செல்போன், லேப்டாப், எதைப் பார்த்தாலும் அதிக வெளிச்சத்துடன் அவற்றைப் பார்ப்பதை தவிர்க்கவும். 

-இந்த கதிர்களை தடுப்பதற்கு என்று இருக்கும் ஸ்கிரீன் பில்டர்களை உபயோகிக்கவும். இது, ப்ளூ லைட்டினால் உங்கள் சருமம் பாதிப்படைவதை தடுக்கும். 

-தொடர்ந்து செல்போன் அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை உபயோகிக்க வேண்டி வந்தால் அவ்வப்போது பிரேக் எடுக்கவும். தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க வேண்டாம். 

-ஸ்கின் கேர் விஷயங்களில் கவனமாக இருக்கவும். முகத்தை வறட்சி அடையாமல் வைத்திருக்கும் moisturizer- ஐ உபயோகிக்கவும். இது கண்டிப்பாக உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும். 

-ஹெல்தியான டயட்டை கடைபிடிக்கவும். இது சருமத்திற்கு பொலிவு கொடுப்பது மட்டுமன்றி, ஸ்கிரீன் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் உதவும். 

தகுந்த சன்ஸ்கிரீனை எப்படி தேர்ந்தெடுப்பது? 

சிலரது சருமம், மிகவும் மிருதுவாக இருக்கும். இப்படிப்பட்ட சருமத்தை உடையோர், நண்பர்கள் பரிந்துரைத்தனர் என்றும் விளம்பரத்தில் பார்த்தேன் என்றும் எந்த கிரீமையும் பயன்படுத்த வேண்டாம். இயற்கை முறையில் தயாரான ஸ்கின் கேர் வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். அதிகம் ரசாயனம் கலக்காத சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தலாம். அதில், "Hypoallergenic அல்லது frangrance free போன்ற வார்த்தைகள் அந்த பாட்டிலின் பின்னால் எழுதப்பட்டிருக்கும். இந்த வகையானஅழகு சாதனப்பொருடகளை மட்டும் தேர்வு செய்யவும். 

மேலும் படிக்க | நரை முடிக்கு இனி கெமிக்கல் ஹேர் டை வேண்டாம், இந்த இயற்கை வைத்தியம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News