குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சும் குடற்புழு... அறிகுறிகளும்... பிரச்சனையை தீர்க்கும் உணவுகளும்...

Symptoms & Home Remedies for Stomach Worms: குடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களால், எடை இழப்பு, உடல் பலவீனம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். உணவை புழுக்கள் சாப்பிட்டு விடுவதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 5, 2024, 04:46 PM IST
  • உணவை புழுக்கள் சாப்பிட்டு விடுவதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
  • குழந்தைகளில் வயிற்றில் குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகள்.
  • வயிற்றுப் புழுக்களை அழிக்கும் சில வீட்டு வைத்தியங்கள்.
குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சும் குடற்புழு... அறிகுறிகளும்... பிரச்சனையை தீர்க்கும் உணவுகளும்... title=

குழந்தைகளுக்கு குறிப்பாக, ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்றுக்கான வாய்ப்பு அதிகம். சுகாதாரமற்ற உணவு அல்லது குடிநீர், அழுக்கு கைகளால் சாப்பிடுவது, அழுக்கு படிந்த கைகளுடன் நீரைக் குடிப்பது, பச்சையாகவோ அல்லது சமைக்காத உணவையோ உட்கொள்வது, ஆகியவை மூலம் குழந்தைகளின் குடலில் ஒட்டுண்ணி புழுக்கள் நுழைந்து வளரும். இவை குழந்தைகளின் ரத்தத்தை உறிஞ்சி உடலை பலவீனமாக்கும். 

குடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களால், எடை இழப்பு, உடல் பலவீனம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். உணவை புழுக்கள் சாப்பிட்டு விடுவதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வயிற்றில் குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகளையும், அதனை போக்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளையும் (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளில் வயிற்றில் குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகள்:

1. வயிற்று வலி குடற்புழு இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். வயிற்று வலி அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.

2. வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி: குழந்தைகளுக்கு குடற்புழுக்களால் அடிக்கடி வயிற்றுப்போக்கு வாந்தி அல்லது குமட்டல் ஏற்படலாம்.

3. அடிக்கடி சிறுநீர் கழித்தல் வயிற்றில் குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்று. அதோடு மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

4. வயிற்றில் இருக்கும் உணவை புழுக்கள் உண்பதன் காரணமாக குழந்தைக்கு அடிக்கடி பசி ஏற்படும். ஆனால், அதிக சாப்பிட்டாலும் சோர்வு பலவீனம் அதிகம் இருக்கும்.

வயிற்றுப் புழுக்களை அழிக்கும் வீட்டு வைத்தியம்... கை கொடுக்கும் சில உணவுகள்

பப்பாளி

பப்பாளியில் பூச்சிகளை செரிமானம் செய்து அழிக்க உதவும் பாப்பைன் என்ற நொதி உள்ளது. பப்பாளி பழத்தை உங்கள் குழந்தைக்கு கொடுத்து வந்தால், புழுக்கள் மலத்துடன் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. 

மஞ்சள்

மருத்துவ குணம் கொண்டது மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்டது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடற்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. இரவில் மஞ்சள் சேர்த்து காய்ச்சிய பால பெரிதும் உதவும்.

தேங்காய்

தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மோனோலாரினாக மாறி குடல் ஒட்டுண்ணி புழுக்களுக்கு எதிர்த்துப் போராட உதவும். இதன் மூலம் குடல் புழுக்கள் அழியும்.

மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் உள்ள குர்குர்பிடின் என்ற கலவை பூச்சிகளை செயல்பட முடியாமல் முடக்கி அழிக்கிறது. எனவே பூசணி விதைகளை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குடல் புழுக்களை அழிக்கலாம்.

பூண்டு

பூண்டில் கிருமி நாசினிகள் பூச்சிகளை அழிக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு பச்சை பூண்டு கொடுக்கலாம், பச்சையாக சாப்பிட மறுத்தால், பூண்டு நீர் தயாரித்துக் கொடுக்கலாம்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் பூச்சிகளை அழிக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைக்கு வயிற்றுப் புழுவின் அறிகுறிகளைக் கண்டால், நீங்கள் அவருக்கு இஞ்சி தண்ணீரைக் கொடுக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News