இளம் வயதிலே மூளையில் கட்டி! ‘இந்த’ அறிகுறி இருந்தா உஷாரா இருங்க!

Brain Tumor Symptoms : மனிதர்களின் உருப்புகளில், மிக முதன்மையான ஒன்றாக இருப்பது, மூளை. இதில் பிரச்சனை வருவதை நாம் இளவயதிலேயே கண்டு பிடிக்கலாம். அது குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 26, 2024, 06:00 PM IST
  • மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள்
  • தலைவலி வரலாம்
  • வலிப்பு உண்டாகலாம்!
இளம் வயதிலே மூளையில் கட்டி! ‘இந்த’ அறிகுறி இருந்தா உஷாரா இருங்க! title=

Brain Tumor Symptoms : காலையில் எழுவதற்கு, வலி ஏற்பட்டால் உணர்வதற்கு, உட்காருவதற்கு, சாப்பிடுவதற்கு, மூச்சு விடுவதற்கு என ஆதி முதல் அந்தம் வரை இயங்க உதவுவது, நம் மூளைதான். நம் உடலிலேயே மிகவும முக்கியமான பாகமான இது, தலைக்குள் பத்திரமாக இருந்தாலும் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடலில் அது பெரிய பாதிப்பாக மாறும். மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு, 40 சதவிகிதம் தண்ணீர், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் உப்பு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் நரம்புகள் உடலின் செயல்பாடுகளுக்கு மூளை காரணமாக இருக்கும். 

மூளையில் கட்டி:

மூளைக்கட்டியை மூளை கேன்சர் என்றும் கூறுவர். இது, உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து மெதுவாக மூளையை சென்றடையலாம். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கும் வரக்கூடும். குழந்தை பருவம் மற்றும் டீன் ஏஜ் பருவங்களை தாண்டியவர்களுக்கு ப்ரைன் டியூமர் வரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மூளையில் கட்டி இருந்தால் என்ன அறிகுறி இருக்கும்:

மூளையில் கட்டி இருப்பதற்கு சில அறிகுறிகள் தெரியும். அவை என்னென்ன தெரியுமா? 

தலைவலி:

மூளையில் கட்டி இருக்கும் நபருக்கு, தலைவலி வருவது முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் இந்த தலைவலி மிகவும் அழுத்தமாக வரும். ஒரே மாதிரியான தலைவலியால் அவர்கள் அவதிப்படுவர். குறிப்பாக அதிகாலை சமயங்களில் அல்லது அயர்ந்து தூங்கி ஓய்வெடுக்கும் சமயங்களிலும் தலைவலி வரலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக இதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பார்வை மங்குவது:

மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு பார்வை மங்குவது அல்லது பார்வையே தெரியாமல் போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வயது காரணமாக, வைட்டமின் குறைபாடு காரணமாகவும் கூட பார்வை மங்கலாம். இருப்பினும், மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு எதிலாவது நேராக பார்ப்பதற்கோ, உண்ணிப்பாக பார்ப்பதற்கோ கடினமாக இருக்கும். அந்த கட்டியின் காரணமாக இது போன்ற பிரச்சனை ஏற்படலாம். 

காது கேளாமை:

மூளைக் கட்டிகள் பெரும்பாலும் காது கேளாமையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மூளை நரம்புகளில் அழுத்தம் மற்றும் காதுகளில் கடுமையான வலியை ஒரே நேரத்தில் உணரும் நபர்களுக்கு மூளைக் கட்டி இருக்கலாம். இது அவர்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | பாதாமை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

குமட்டல் வாந்தி:

காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வாந்தி-குமட்டல் போன்ற உணர்வு இருந்து, அதனுடன் சேர்ந்து தலைவலியும் ஏற்பட்டால் அது மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். மூளையில் இருக்கும் திசுக்களில் ரத்தம் உரைந்தாலோ அல்லது ரத்த ஓட்டம் நடைபெறாமல் இருந்தாலோ இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

வலிப்பு:

வலிப்பு நோய் என்பது மூளைக் கட்டிகளின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இது பொதுவாக அனைத்து மூளையில் கட்டி இருக்கும் நோயாளிகளிடம் குறைந்தது 40 சதவீதத்தில் காணப்படுகிறது. எனவே, இந்த அறிகுறி இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெருவது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? இதயம் பலவீனமாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News