பலருக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது கடினமாக இருக்கும். இரவில் தூங்காத பிரச்சனையால் வாடுபடுபவர்களால், உற்சாகமாக வேலை செய்வதிலும் பிரச்சனை இருக்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், உங்கள் வேலை திறன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ஓய்வெடுக்க நமது உடலுக்கு குறைந்தது 8 மணிநேரம் தேவை. அப்போது தான் அடுத்த நாளை உற்சாகமாக தொடங்க முடியும்
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங், இது குறித்து கூறுகையில், தூக்கமின்மைக்கு வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார். உங்கள் உணவில் சேர்க்கப்படும் சில உணவுகள், உங்களுக்கு ஆழ்ந்த நிம்மதியாக உறக்கத்தை கொடுக்கும் என்கிறார்.
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
1. பாதாம்
பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மூளையின் சக்தியை அதிகரிப்பதுடன், பாதாம் உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துக் கொள்வது நன்றாக தூங்குங்கள்.
2. டார்க் சாக்லேட் உட்கொள்ளுதல்
பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
3. வாழைப்பழம்
ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
4. சூடான பால் அருந்துதல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு சிறந்த பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
5. செர்ரி பழங்கள்
செர்ரி பழங்களில் பினியல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு செர்ரி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 10-12 செர்ரிகளை சாப்பிடுவது நன்றாக தூங்க உதவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ | Protein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR