ஹேர் பேக் பயன்படுத்துபவரா நீங்கள்? இதை கொஞ்சம் கவனியுங்கள்

Hair Pack: பெரும்பாலான மக்கள் முடியை வளர்க்க பலவித ஹேர் பேக்கை பயன்படுத்துகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஹேர் பேக்கைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2022, 02:50 PM IST
  • முடி பராமரிப்பு குறிப்புகள்
  • ஹேர் பேக் போடும் போது மனதில் கொள்ள வேண்டியவை

Trending Photos

ஹேர் பேக் பயன்படுத்துபவரா நீங்கள்? இதை கொஞ்சம் கவனியுங்கள் title=

ஹேர் பேக் பயன்படுதும் போது மனதில் கொள்ள வேண்டியவை: பெரும்பாலானோர் தலைமுடிக்கு ஊட்டமளிக்க பலவித ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹேர் பேக் பயன்படுத்தும் முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் கவனித்துக்கொள்ல வேண்டும். அப்படி நீங்கள் கவனிக்காமல் போனால், ஹேர் பேக் முடிக்கு பலன் கொடுப்பதற்கு பதிலாக கேடு விளைவிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹேர் பேக் பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னவென்று இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஹேர் பேக் பயன்படுத்தும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்-

முடி வகைக்கு ஏற்ப ஹேர் பேக்கை தேர்வு செய்யவும்- ஹேர் பேக் பயன்படுத்தும் முன் உங்களின் முடி வகைக்கு ஏற்ப ஹேர் பேக்கை தேர்வு செய்யவும். உங்கள் தலைமுடி அதிக எண்ணெய்ப் பசையாக இருந்தால், கற்றாழையுடன் கூடிய ஹேர் பேக்கைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். மறுபுறம், உங்கள் தலைமுடி மிகவும் மெல்லியதாக இருந்தால், வெந்தய விதைகளைக் கொண்ட ஹேர் பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் ஆகும்.

மேலும் படிக்க | ரசாயனம் சேர்க்கப்படாத ஆர்கானிக் கருப்பட்டி

முடியின் முனையிலும் ஹேர் பேக்கை தடவவும்- நீங்கள் பயன்படுத்தும் ஹேர் பேக்கை வெறும் உச்சந்தலையில் மட்டும் தடவினால் போதும் என்று பலர் எண்ணுகின்றனர், ஆனால் அது தவறானது. உங்கள் முடியின் வேர்களுடன், குறிப்புகளுக்கும் ஊட்டச்சத்து தேவை. எனவே ஹேர் பேக்கை பயன்படுத்தும் போது உங்கள் தலைமுடியில் மேலிருந்து கீழாக தடவவும். 

வாரத்திற்கு ஒரு முறை ஹேர் பேக் பயன்படுத்துங்கள்- அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலுக்கு, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள். ஹேர் பேக்கில் ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இருக்கும், இது சேதமடைந்த முடியை சரிசெய்ய வேலை செய்கிறது. எப்படி உணவு உடலுக்குச் செல்ல வேண்டுமோ அதேபோன்று தலைமுடிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஹேர் பேக்கை அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டாம் - ஹேர் பேக்கை முடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடாதீர்கள். ஹேர் பேக்கை தலைமுடியில் தடவி ஊற வைக்க 10 முதல் 25 நிமிடங்கள் போதும். முடியில் நீண்ட நேரம் ஹேர் பேக்கை வைத்துக்கொள்வதன் மூலம், முடி வறண்டு, உயிரற்றதாக மாறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News