Coronavirus தீவிரத்தை தலையில் தட்டி அடக்கும் ஆற்றல் சைவ உணவுக்கு உள்ளது: ஆய்வு

தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்பவர்கள் கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு என்று ஆராய்ச்சி கூறியுள்ளது. இதேபோல், மீன்களை உட்கொள்பவர்களிலும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 08:53 PM IST
  • உலகெங்கிலும் கொரோனா வைரஸ் குறித்து புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு கடுமையான கொரோனா தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு-ஆய்வு.
  • மீன்களை உட்கொள்பவர்களிலும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும்.
Coronavirus தீவிரத்தை தலையில் தட்டி அடக்கும் ஆற்றல் சைவ உணவுக்கு உள்ளது: ஆய்வு title=

Health News on Coronavirus Food: கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பாதித்துள்ளது. உலகெங்கிலும் இது குறித்து புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது ஒரு சமீபத்திய ஆராய்ச்சியில், சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு கடுமையான கொரோனா தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்று கூறப்பட்டுள்ளது. 

தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்பவர்கள் கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு என்று ஆராய்ச்சி கூறியுள்ளது. இதேபோல், மீன்களை (Fish) உட்கொள்பவர்களிலும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன 

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், சைவ உணவு (Vegetarian Food) உட்கொள்பவர்களுக்கு கடுமையான கொரோனா தொற்று வருவதற்கான ஆபத்து 73 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல் மீன் உட்கொள்ளும் மக்களில் இந்த ஆபத்து 59 சதவீதம் குறைவாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

ALSO READ: Health News: அத்திப்பழமும் அதிகமானால் ஆபத்துதான், விவரம் இதோ!!

கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) தீவிரத்தில் நமது உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய சில ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், நமது உணவு பழக்க வழக்கங்களைப் பொறுத்து அதன் தீவிரம் அதிகமாவதும் குறைவதும் நடக்கும். இந்த ஆராய்ச்சி பி.எம்.ஜே ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய்க்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முன்னணி வீரர்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினர்.

இந்த கணக்கெடுப்பில், பங்கேற்பாளர்களிடம் அவர்களது உணவு மற்றும் பானம் மற்றும் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சைவ உணவை உண்ணும் மக்களில் இந்த தொற்றுநோயால் தீவிர தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அசைவ மக்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

ALSO READ: Children Health: குழந்தைகளின் கண்பார்வையை மேம்படச் செய்யும் உணவுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News