வேகமா உடல் எடையை குறைக்க.. இப்பவே இந்த டீ குடிங்க: அச்சரியப்படுவீங்க!!

Weight Loss with Pineapple: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அன்னாசி நல்லதாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளில் இதை சாப்பிடலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2023, 12:29 PM IST
  • அன்னாசிப்பழத்தில் சரியான அளவு நார்ச்சத்து உள்ளது.
  • இதன் காரணமாக, இது எடை இழப்புக்கு உதவும்.
  • நீங்கள் அன்னாசி டீ குடிக்கும்போது, ​​உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது.
வேகமா உடல் எடையை குறைக்க.. இப்பவே இந்த டீ குடிங்க: அச்சரியப்படுவீங்க!! title=

உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 

அன்னாசி டீ மூலம் உடல் எடை இழப்பு: 

அன்னாசிப்பழம் சத்துக்களின் களஞ்சியமாகும். புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் என பல சத்துக்கள் இதில் உள்ளன. இதனால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் உடல் எடையை குறைக்கும் பணிகளையும் இந்த பழம் செய்கிறது என்பது பலருக்கு தெரியாது. அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது நல்லது என்று கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளில் இதை சாப்பிடலாம். அதில் ஒரு வகை அன்னாசி டீ ஆகும். இதன் மூலம் நமது எடை இழப்பு மட்டுமல்லாமல் பொதுவான ஆரோக்கியத்துக்கும் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. 

குறைந்த கலோரி - அன்னாசிப்பழத்தில் கலோரிகளின் அளவு மிக குறைவு. ஆகையால், இந்த பழம் எடை இழப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. தினமும் அன்னாசி டீயை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

குறைந்த கார்போஹைட்ரேட்ஸ் - அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவாக உள்ளன. எடை இழப்புக்கு இது பயனுள்ளதாக கருதப்படுவதற்கான காரணம் இதுதான். நீங்களும் எடையை விரைவாக குறைக்க விரும்பினால், அன்னாசி டீயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து நிறைந்தது - அன்னாசிப்பழத்தில் சரியான அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக, இது எடை இழப்புக்கு உதவும். நீங்கள் அன்னாசி டீ குடிக்கும்போது, ​​உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. உங்கள் வயிற்றில் இந்த நிரம்பிய உணர்வு இருந்தால், உங்களுக்கு எதையும் அடிக்கடி சாப்பிடும் ஆசை தோன்றாது. இதனால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை நாம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இதன் காரணமாக எடை குறைப்பு முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். 

ப்ரோமெலைன் - உடலில் உள்ள கொழுப்பை எரிக்கச் செய்யும் அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது உணவின் ஜீரணத்தை எளிதாக்குகிறது. இதனால் உங்கள் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். இதன் காரணமாக, வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும். இது எடை இழப்புக்கு உதவுகிறது.

மேலும் படிக்க | இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மாறனுமா? இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்

அன்னாசி தேநீர் தயாரிப்பது எப்படி

தேவையான பொருட்கள்

- தண்ணீர்
- அன்னாசி பழச்சாறு
- எலுமிச்சை சாறு
- தேயிலை பை

அன்னாசி தேநீர் செய்முறை

- அன்னாசி தேநீர் தயாரிக்க, முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- இப்போது இந்த தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றவும்.
- அதில் டீ பேக்கை போட்டு, 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்
- இப்போது அதனுடன் அன்னாசி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- இதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கவும்

அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகக் குறைவாகவும் உள்ளன. இதன் காரணமாக உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு இது ஒரு நல்ல துணையாக இருக்கும். ஆனால் அன்னாசி டீயை மட்டும் குடிப்பதால் உடல் எடையை குறைக்க முடியாது. இதற்கு, உங்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவும் தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பை குறையனுமா.. தினமும் காலையில் இந்த பானங்களை குடியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News