பெரும்பாலான மக்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவாலாகவே உள்ளது. அதிலும் குளிர்காலத்தில் மிகவும் கடினமாக தோன்றும். அதற்கு முக்கிய காரணம் குளிர்காலத்தில் அதிக பசி எடுப்பதோடு, இயற்கையாக எழும் சோம்பல் உணர்வு மற்றும் குறைவான உடல் செயல்பாடு, மெதுவான வளர்சிதை மாற்றம் ஆகியவை. இதன் காரணமாக உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது. நீங்கள் உங்கள் அதிகரித்த உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் சில எடை இழப்பு சூப்பை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சூப்களில் புரதம் நிறைந்துள்ளது என்பதோடு, மிகக் குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்டது என்பது கூடுதல் நன்மை அளிக்கக் கூடிய விஷயம். இவற்றைக் குடிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதோடு, பசியும் குறையும். இவை உடல் பருமனைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும். இவற்றை தினமும் குடித்து வந்தால், ஒரு வாரத்தில் உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும். இன்று இந்தக் கட்டுரையில் உடல் கொழுப்பை எரிக்க சிறந்த வகையில் பயன் அளிக்கும் 5 சூப்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவற்றை உட்கொள்வதன் மூலம் நீங்கள் குளிர்காலத்தில் எளிதாக உடல் எடையைக் குறைக்கலாம்.
காலிஃபிளவர் சூப்
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க காலிஃபிளவர் சூப் குடிக்கலாம். இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. அதோடு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் காலிஃபிளவர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
தக்காளி சூப்
தக்காளி சூப் சுவையானது மட்டுமல்ல, மிகவும் சத்தானதும் கூட. வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளன. குளிர்காலத்தில் இரவில் சூடான தக்காளி சூப்பை ஒரு கப் குடிப்பது உங்கள் வயிறு நிறைந்திருக்கும், இது எடை குறைக்க உதவும். தக்காளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகமாக உள்ளது. இது கண்களுக்கும் நன்மை பயக்கும். மேலும், இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
காய்கறி சூப்
குளிர்காலத்தில் எடை இழப்புக்கு கலவையான காய்கறி சூப் சாப்பிடலாம். இதில் நீங்கள் ப்ரோக்கோலி, கேரட், கீரை, பீட்ரூட், கேப்சிகம், பட்டாணி, முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம். இந்த சூப்பில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். அதுமட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும், ஆற்றலும் கிடைக்கும்.
கீரை
கீரையில் உள்ள நன்மைகள் ஏராளம். ஊட்டசத்துக்களின் களஞ்சியம். உடல் பருமன் குறைய வேண்டுமானால் கீரை சூப் செய்து குடிக்கலாம். இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கிண்ணம் கீரை சூப் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இரத்த சோகை பிரச்சனையை நீக்கவும் இது உதவும். குளிர்காலத்தில் மிகவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
சிக்கன் சூப்
குளிர்காலத்தில் எடை இழப்புக்கு சிக்கன் சூப் ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது மிகக் குறைந்த கலோரி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, எனவே இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை குடிப்பதால் உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எலும்பு வலி, பலவீனம், சோர்வு: வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ