க்ரீன் டீயின் பக்கவிளைவுகள்: தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க விருப்பம் கொண்டவர்கள் அதற்காக பல வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிரீன் டீயை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கிரின் டீ மூலம் அதிகரிக்கும் எடையைக் குறைக்கலாம். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இதை தொடர்ந்து குடிப்பதால் கூந்தலின் பொலிவும் நிலைத்திருக்கும். ஆனால் எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்று கூறப்படுகிறது. கிரீன் டீயிலும் இதே நிலைதான். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ் கூறுகையில், இந்த மூலிகை டீயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக காணலாம்.
கிரீன் டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
- பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை அதிகமாக குடிப்பதால், வயிற்றில் அமிலம் உருவாகத் தொடங்குகிறது. மேலும் இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. குடல் நோய்க்குறி உள்ளவர்கள் க்ரீன் டீயை அருந்தவே கூடாது.
- அதிகப்படியான கிரீன் டீ குடிப்பது தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலி நோயை ஏற்படுத்தும். உங்களுக்கு காஃபின் ஒவ்வாமை இருந்தால் இந்த பானத்தை உட்கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க | புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழைக்காய்: வாழவைக்கும் வாழை
- வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். கிரீன் டீயை ஏதாவது சாப்பிட்ட பின்னரே உட்கொள்ள வேண்டும் என்று நம்பப்படுகிறது.
- கிரீன் டீயில் காஃபின் உள்ளது. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இந்த மூலிகை தேநீர் தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனைச் சீர்குலைக்கத் தொடங்குகிறது. எனவே, 8 மணி நேரம் சரியாகத் தூங்க முடியாத பிரச்சனை உள்ளவர்கள், கிரீன் டீயைக் குடிக்கக் கூடாது.
- மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தேவைக்கு அதிகமாக க்ரீன் டீயை அருந்தக்கூடாது. பொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப்புக்கு மேல் க்ரீன் டீ குடித்தால் அது ஆபத்தாகலாம்.
- கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ