ஹெலோ மேடம், உங்க வயசு முப்பதா? உஷாரா இருங்க

Women Health: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, எலும்புகள் உள்ளிருந்து பலவீனமடையத் தொடங்குகின்றன. உடல் செயல்பாடு இல்லாததால், நமது எலும்புகள் பலவீனமடையும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 27, 2023, 07:31 PM IST
  • வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை ஏற்படுகிறது.
  • வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனையில் நரம்புகள் அடிக்கடி வீங்கி தடித்து காணப்படும்.
  • இதை நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் யோகா செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஹெலோ மேடம்,  உங்க வயசு முப்பதா? உஷாரா இருங்க

பெண்களின் ஆரோக்கியம்: மனித உடலில் வயது அதிகரிக்கும்போது, பல மாற்றங்களும் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஆண்களை விட பெண்களுக்கு விரைவில் ஏற்படுகின்றன. மோசமான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, அதன் நேர வரம்பும் குறைந்துள்ளது. 30 வயதிற்கு பிறகு, பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், பல நோய்கள் ஏற்படலாம். 

30 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில நோய்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஆஸ்டியோபோரோசிஸ்:

மோசமான வாழ்க்கை முறை காரணமாக, 30 வயதில் உடலில் பல பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன. அவற்றில் ஒன்று எலும்புகள் பலவீனமடைவது. நீங்கள் சரியான உணவை உட்கொள்ள முடியாவிட்டால், உங்கள் எலும்புகள் பலவீனமடையக்கூடும், இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும். 

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, எலும்புகள் உள்ளிருந்து பலவீனமடையத் தொடங்குகின்றன. உடல் செயல்பாடு இல்லாததால், நமது எலும்புகள் பலவீனமடையும். இதனால், எலும்புகள் அவற்றின் ஆரோக்கியமான எடையை மெதுவாக இழக்க நேரிடும். இது தவிர, உணவில் கால்சியம் இல்லாதது அல்லது உடலில் கால்சியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த காரணங்களால், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை ஏற்படுகின்றது. 

கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள்:

ஒருவது வாழ்க்கை முறை சரியில்லை என்றால், 30 வயதிற்குப் பிறகு, கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள் தொடங்குகின்றன. சில பெண்களின் கருவுறுதல் திறன் 30 வயதிற்குப் பிறகு படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகிறது. இதனால் கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதை சரிசெய்ய சரியான உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் இந்த சிக்கலை ஒரு அளவிற்கு குறைக்க முடியும். 

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

மார்பக புற்றுநோய்:

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகமாக உள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக மாறிவருகிறது. அதன் அறிகுறிகள் 20-களிலேயே தெரியத் தொடங்குனின்றன. 

இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சரி செய்ய வேண்டியது அவசியமாகும். மார்பு பகுதியில் கட்டி, மார்பகப் பகுதியில் தடித்தல், வீக்கம், எரிச்சல் அல்லது மார்பகத்தின் தோலில் குழி, இரத்தம் கசிதல், முலைக்காம்பு வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். 

வெரிகோஸ் வெயின்ஸ்:

வெரிகோஸ் வெயின்ஸ் நரம்புகள் தொடர்பான வலி மிகுந்த நோயாகும். இந்த நோயில், நரம்புகளின் விரைவான வீக்கம் ஏற்படும். இதன் காரணமாக ஒரு கூர்மையான வலி ஏற்படுகின்றது. 30 க்குப் பிறகு, இந்த நோய் வருவதற்கான ஆபத்து வேகமாக அதிகரிக்கிறது. வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஆகிய காரணங்களால் இது ஏற்படுகின்றது. 

நரம்புகள் பெரியதாக அல்லது அகலமாக இருந்தாலோ, அல்லது, நரம்புகளில் அதிக இரத்தம் சேர்ந்தாலோ இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனையில் நரம்புகள் அடிக்கடி வீங்கி தடித்து காணப்படும். 

இவை நீலம் அல்லது சிவப்பு நிறமாகத் தெரியும். இதில் வலி அடிக்கடி உணரப்படுகிறது. இந்த பிரச்சனை பெண்களுக்கு மிகவும் பொதுவானதாக உள்ளது. சுமார் 25-30 சதவீதம் பேர் வெரிகோஸ் வெயின் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதை நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் யோகா செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குளித்த உடனேயே துண்டை போர்த்திக்கொள்ளாதீர்கள்! ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News