எலும்புகளில் வலு இல்லையா? இன்றே இந்த 5 விஷயங்களை தவிர்த்து விடுங்கள்

Bone Health: சில உணவுகளின் காரணமாக நமது உடலுக்கு நன்மைகள் குறைவாகவும் தீமைகள் அதிகமகாவும் கிடைக்கின்றன. இவற்றின் காரணமாக எலும்புகளில் வலி ஏற்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 03:59 PM IST
  • எலும்பு ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
  • அதிக உப்பு மற்றும் சர்க்கரை சாப்பிட வேண்டாம்
  • டீ மற்றும் காபி குடிப்பதை குறைக்கவும்.
எலும்புகளில் வலு இல்லையா? இன்றே இந்த 5 விஷயங்களை தவிர்த்து விடுங்கள் title=

எலும்பு ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளைத் தவிர்க்கவும்: உங்கள் உடலின் எலும்புகள் தொடர்ந்து பலவீனமடைகின்றனவா? நல்ல உணவுப் பழக்கம் இருந்தும் உங்கள் எலும்பின் ஆரோக்கியம் மேம்படவில்லையா? உங்கம் விடை ‘ஆம்’ என்றால் இந்த பதிவில் உங்களுக்கான முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. இப்படிப்பட்ட சிக்கலை நீங்களும் எதிர்கொண்டால், உடனடியாக எலும்புகளுக்கான மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும். மேலும் உங்கள் உணவு முறையிலும் நீங்கள் பல மாற்றங்களை செய்ய வேண்டும். 

சில உணவுகளின் காரணமாக நமது உடலுக்கு நன்மைகள் குறைவாகவும் தீமைகள் அதிகமகாவும் கிடைக்கின்றன. இவற்றின் காரணமாக எலும்புகளில் வலி ஏற்படுகிறது. உடலுக்கும் குறிப்பாக எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அதிக உப்பு மற்றும் சர்க்கரை சாப்பிட வேண்டாம்

சர்க்கரையும் உப்பும் நமது உணவின் முக்கிய அங்கமாகும். இவை இல்லாமல், உணவில் நல்ல சுவையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் உப்பு மற்றும் சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால், உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. மேலும் இதன் காரணமாக உடலில் எப்போதும் சோர்வும் வலியும் இருப்பது போல இருக்கும். ஆகையால், கண்டிப்பாக உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் சேருங்கள், ஆனால் சரியான அளவில் அவற்றை சேர்ப்பது நல்லது. 

மேலும் படிக்க | Neem Bad Side: அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம் 

டீ மற்றும் காபி குடிப்பதை குறைக்கவும்

உறக்கத்தைப் போக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் அனைத்து வீடுகளிலும் டீ, காபி குடிப்பது சகஜம். ஆனால் இவை இரண்டிலும் காஃபின் என்ற ஒரு தனிமம் உள்ளது. இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். டீ, காபி போன்றவற்றை அதிகம் அருந்தும்போது, ​​அதில் உள்ள காஃபின் நம் உடலில் உள்ள கால்சியத்தை குறைக்கிறது. இதனால் எலும்புகளில் வலி ஏற்படுகிறது. இதேபோல், பீடி-சிகரெட் மற்றும் மெல்லக்கூடிய புகையிலையில் உள்ள நிகோடின் கால்சியம் குறைபாட்டிற்கு காரணமாக அமைகின்றது.

குளிர் பானங்களால் கால்சியம் குறைபாடு

குளிர் பானங்கள் இல்லாமல் விருந்துகள் முடிவடைவதில்லை. குளிர் பானங்களில் ருசியை அதிகரிக்க சோடா, ரசாயனங்கள் ஆகியவை கலக்கப்படுவது பலருக்கு தெரிவதில்லை. இவற்றை உட்கொள்வதால், எலும்புகளுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. எலும்புகள் நாளுக்கு நாள் பலவீனமடையத் தொடங்குகின்றன. அதுமட்டுமின்றி அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு விலங்குப் புரதம் அதிகமாக இருப்பதால், உடலில் கால்சியம் சத்து குறையும். இதன் காரணமாக உடலில் வலி தொடங்குகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பளபளக்கும் தோலை கெடுக்கும் உணவுகள் இவை; இளமை பராமரிக்க தவிர்த்துவிடுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News