சென்னை: நாடு முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சுவாசப் பிரச்சனை.
நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் (Coronavirus) பெரும்பாலான கோவிட் நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சனையையும், மூச்சு விடுவதில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் உடலில் ஆக்சிஜன் (Oxygen) அளவு குறைவதால், நிலைமை மோசமாகி, அது மரணத்திற்கும் வழிகோலுகிறது.
எனவே நாட்டில் ஆக்சிஜன் உற்பத்திப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்திப் பணி மும்முரப்படுத்தப்பட்டு, தயாரிக்கப்படும் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்
இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் (Tamil Nadu) பல்வேறு இடங்களில் இருந்தும் ரயில் மூலம் மருத்துவ ஆக்சிஜன்கள் (Medical Oxygen) வருகின்றன.
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜன் விநியோகம், இந்தியன் ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் (Oxygen Express) ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு இதுவரை 151 மெட்ரிக் டன் ஆக்சிஜன் (Oxygen) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல், பல்வேறு மாநிலங்களுக்கும் 590 டேங்கர்கள் (Tankers) மூலம் 9 ஆயிரத்து 440 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 151 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்து இருக்கிறது.
ALSO READ | இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா
இதுவரை சுமார் 150 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் சேவையை செய்து முடித்துள்ளன. 12 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Indian Railway), 55 டேங்கர்களில் 970 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்சிஜனை விநியோகித்துள்ளன.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து, பல உயிர்களை பலி கொடுத்தது டெல்லி. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இதுவரை கிட்டத்தட்ட 5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன், ரயில்கள் மூலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது.
கேரள மாநிலத்துக்குச் சென்ற முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், 118 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு சென்றது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு தோராயமாக 2,525 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
Covid-19 நோயை எதிர்க்கும் போராட்டத்தில் பலரும் பல்வேறு விதங்களில் பங்கு வகித்தால், இந்திய ரயில்வே, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் உயிர்காற்றை விநியோகித்து, தனது பங்களிப்பை செய்துவருகிறது.
Also Read | தமிழ் பஞ்சாங்கம் 16 மே, 2021: இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR