காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி ரயில் நிலையத்தில் சுமார் 20 ரயில்கள் தாமதமாகியுள்ளது......
வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கான்புதிரன் குறைவு காரணமாக, ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 20 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. பனி மூட்டத்துடன் காற்று மோசம் அடைந்துள்ளது.
20 trains to Delhi are running late today due to fog/low visibility. (file pic) pic.twitter.com/uolzDVFP9g
— ANI (@ANI) February 9, 2019
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.