கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 8, 2020, 12:28 PM IST
கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! title=

கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்!!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மற்ற விமானப் பயணிகளிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். மற்ற விமான நிலையப் பயணிகளுடன் கலந்துரையாட அவர்களுக்கு அனுமதியில்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார், 30 விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரத்த மாதிரிகளை பெற்று இந்த மையங்கள் நோயை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. கொரோனா பீதியால் அலுலக ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என சுகாதார அமைச்சர் ஷைலஜா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இவர்களில் 3 நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். மீதமுள்ள இருவர் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கேரளாவின் முதல் கொரானா வைரஸ் பாதிப்பு, மருத்துவ மாணவர் ஒருவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இப்போது,  5 பேர் கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகி விட்டதால், கேரளா முழுவதும் உஷார் படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. 

 

Trending News