ஏழைகளின் தோழன், PM ஜன் தன் யோஜனாவின் வெற்றிகரமான ஆறு ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு!!

பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா - நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் 19, 2020 நிலவரப்படி, மொத்த PMJDY கணக்குகளின் எண்ணிக்கை 40.35 கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2020, 02:52 PM IST
  • 2014 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் PMJDY பற்றி அறிவித்தார்.
  • PMJDY, நிதி சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டமாகும்.
  • கிராமப்புற PMJDY கணக்குகள் 63.6 சதவீதமாகவும், பெண்களின் PMJDY கணக்குகள் 55.2 சதவீதமாகவும் உள்ளன.
ஏழைகளின் தோழன், PM ஜன் தன் யோஜனாவின் வெற்றிகரமான ஆறு ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு!!  title=

புதுடில்லி: பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) - நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2014 ஆகஸ்ட் 15 அன்று பிரதம மந்திரி நரேந்திர மோடி PM Narendra Modi) அவர்கள் தனது சுதந்திர தின உரையில் PMJDY பற்றி அறிவித்தார். PMJDY, நிதி சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டமாகும். அதாவது வங்கி / சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம், கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அனைவரையும் உள்ளடக்கும் ஒரு செயல்முறையாகும் இது.

ஜன் தன் திட்டத்தை 6 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்தமை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். PM-JDY ஐ வெற்றிகரமாக மாற்ற அயராது உழைத்த அனைவரையும் அவர் பாராட்டினார். அவர் ட்வீட் செய்ததாவது:

ஆகஸ்ட் 19, 2020 நிலவரப்படி, மொத்த PMJDY கணக்குகளின் எண்ணிக்கை 40.35 கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமப்புற PMJDY கணக்குகள் 63.6 சதவீதமாகவும், பெண்களின் PMJDY கணக்குகள் 55.2 சதவீதமாகவும் உள்ளன. திட்டத்தின் முதல் ஆண்டில் 17.90 கோடி PMJDY கணக்குகள் திறக்கப்பட்டன.

ALSO READ: PM KISAN: ஆக., 1 முதல் விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் செலுத்தபடும்!

"ஒதுக்கப்பட்ட மற்றும் இதுவரை சமூக-பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வகுப்புகளுக்கு நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) மற்றும் ஆதரவை வழங்க நிதி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதால் நிதி உள்ளடக்கம் என்பது அரசாங்கத்தின் தேசிய முன்னுரிமையாகும். ஏழைகள் தங்கள் சேமிப்புகளை முறையான நிதி முறைக்குள் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக இது இருப்பதால், இது ஒரு முக்கியமான திட்டமாகும். கிராமங்களில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு பணத்தை அனுப்புவதற்கான ஒரு வழியும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியிலிருந்து வெளியேற்றுவதற்கான வழியும் ஏழைகளுக்கு இதன் மூலம் கிடைக்கிறது. இந்த உறுதிப்பாட்டின் முக்கிய முயற்சிதான் பிரதான் மந்திரி ஜான் தன் யோஜ்னா (PMJDY). இது உலகின் மிகப்பெரிய நிதி சேர்க்கும் முயற்சிகளில் ஒன்றாகும் "என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

PMJDY இன் 6 வது ஆண்டுவிழாவில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Stharaman) இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார் “பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மோடி அரசாங்கத்தின் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. நேரடி நன்மை பரிமாற்றங்கள், COVID-19 நிதி உதவி, PM-KISAN, MGNREGA இன் கீழ் அதிகரித்த ஊதியங்கள், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுத் தொகை என எதுவாக இருந்தாலும், இவை அனைத்துக்கும் முதல் படி ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கை வழங்குவதாகும். அதை இந்த PMJDY திட்டம் கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளது.” என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: PM Kisan Scheme: 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? இந்த எண்ணை அழைக்கவும்!!

Trending News