கொரோனா: 24 மணி நேரத்தில் 67 பேர் இறப்பு; 1823 புதிய தொற்று; நோயாளிகளின் எண்ணிக்கை 33610

கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கோவிட் -19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 432 பேர் உயிரிழந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2020, 06:34 PM IST
கொரோனா: 24 மணி நேரத்தில் 67 பேர் இறப்பு; 1823 புதிய தொற்று; நோயாளிகளின் எண்ணிக்கை 33610 title=

கொரோனா தாக்கம்: இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​33,610 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளில், நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக 1075 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது மொத்தம் 24,162 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 1823 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. அதேபோல இந்த வைரஸ் காரணமாக 67 பேர் உயிர் இழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாட்டில் அத்தகைய நபர்களின் எண்ணிக்கை 8373 ஐ எட்டியுள்ளது.

 

மகாராஷ்டிராவில் அதிக மரணம்:
சுகாதார அமைச்சகத்தினால் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கோவிட் -19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 432 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதே நேரத்தில் 130 பேர் மத்திய பிரதேசத்தில் வைரஸால் மரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், குஜராத்தில் தொற்றுநோயால் 197 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் முறையே 39 மற்றும் 56 பேரும் இறந்துள்ளனர். 

நாட்டில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.

சென்னையில் மட்டும் 138 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 906 ஆக அதிகரித்து உள்ளது.

Trending News