ஜார்கண்ட் துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

ஜார்கண்ட் மாநிலம் பலாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரகசிய தாக்குதலில் 1 மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Last Updated : Feb 9, 2018, 11:20 PM IST
ஜார்கண்ட் துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை! title=

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் பலாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரகசிய தாக்குதலில் 1 மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேச்சுஹா காவல்துறை சராங்கத்திற்கு உட்பட்ட ஜுன்ஜுனா காட்டில் இந்த துப்பாக்கிசூடு நடைப்பெற்றுள்ளது. மாலை நடைப்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார், மற்றொருவர் காயங்களுடன் பிடிப்பட்டார். 

பிடிப்பட்டவர்களிடம் இருந்து நான்கு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

பாதுகாப்பு படையினரை மாவோயிஸ்டுகள் தாக்கியதன் பிறகே இந்த துப்பாக்கிச்சூடு நடைத்தப்பட்டதாக, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிடிப்பட்ட மாவோயிஸ்ட 15 வயது மதிப்புத்தக்க பெண் என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது வருமை காரணமாக இக்கூட்டத்தில் இவர் இணைக்கப்பட்டுள்ளார் எனவும் அதிகாரி மம்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலின் போது மற்றவர்கள் காவல்துறையினரை எதிர்த்து போராடுகையில், இவர் மட்டும் பயந்து அருகாமையில் இருந்து புதருக்குள் ஒளிந்திருந்ததாகவும் அவர் தெரிவத்துள்ளார்!

Trending News