அதிர்ச்சி!! உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆதார் தகவலை ஹேக் செய்யலாம்

பொதுமக்களின் ஆதார் அட்டை விவரங்களை திருட சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2018, 06:34 PM IST
அதிர்ச்சி!! உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆதார் தகவலை ஹேக் செய்யலாம் title=

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) மீது மேலும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கிறது. அது பொதுமக்களின் ஆதார் அட்டை விவரங்களை பெற சாப்ட்வேர் ஒன்று பயன்பாட்டில் உள்ளது எனவும், ஆதார் எண் பாதுகாப்பதில் கடுமையான தோல்விகளை தனிப்பட்ட அடையாள ஆணையம் கண்டிருக்கிறது என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் ஒரு பிரத்யேக 'பேட்ச்’ (patch) சாப்டவேர் மூலம் பாதுகாப்பு அம்சங்களை முடக்கிய ஆதார் விவரங்களை பெறலாம். கடந்த மூன்று மாதமாக மேற்கொண்ட விசாரணையில், உலகின் எந்த மூலையில் இருந்தும் 'பேட்ச்’ சாப்டவேர் மூலம், தனிப்பட்ட மனிதனின் ஒப்புதல் இல்லாமல், ஹேக் செய்து, தனிப்பட்ட அடையாள ஆணையம் தளத்தில் நுழைந்து ஆதார் எண் விவரங்களை பெற முடியும். 

இதுக்குறித்து பல பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த 'பேட்ச்’ (patch) சாப்டவேர் குறித்து ஆராயப்பட்டு, கடைசியாக உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் தொடர்பு கொண்ட போது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.

தற்போது இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுக்குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது குறித்து இதுவரை இந்த தகவலும் இல்லை.

(With PTI Inputs)

Trending News