லட்டு வாங்க ஆதார் கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம்

Last Updated : Jun 11, 2017, 09:22 AM IST
லட்டு வாங்க ஆதார் கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம்  title=

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான், திருப்பதி கோவிலில் லட்டு வழங்க முடியும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தற்போது, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு செய்பவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News