குஜராத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மகாத்மா காந்தியாக (Mahatma Gandhi) உடையணிந்து ராஜ்கோட்டில் COVID-19 சோதனைக்கு சென்றார். ஒரு ‘குட்டி காந்தியாக’ அவர் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்ட படங்கள் இணையத்தில் இதயங்களை வென்று வருகின்றன.
சமூக ஊடகங்களில் இந்த படங்கள் வைரலாகி அச்சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் ஒரு வெள்ளை வேட்டி அணிந்து காணப்படுகிறார். காந்தியடிகளின் சின்னமான வட்டக் கண்ணாடி மற்றும் ஒரு குச்சியுடன் அவரது தோற்றம் பூர்த்தியடைகிறது.
பல முக்கிய கருத்துக்களைப் பற்றி பேசிய சிறுவன், பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வைப் பரப்ப விரும்புவதாகவும், இந்த சோதனையை செய்துகொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
ANI பகிர்ந்த சிறுவனின் படங்கள் இதோ, உங்கள் பார்வைக்கு:
Gujarat: A 10-year-old boy from Rajkot dressed up as Mahatma Gandhi and went for his #COVID19 test.
He said, "My swab samples have been taken for coronavirus test. People should not be apprehensive about the test. Our country will be healthy only if we cooperate." (29.09.2020) pic.twitter.com/pfFoSwsgUb
— ANI (@ANI) September 30, 2020
“என் ஸ்வாப் மாதிரிகள் கொரோனா வைரஸ் (Corona Virus) சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சோதனையைப் பற்றி மக்கள் பயப்படக்கூடாது. நாம் ஒத்துழைத்தால் மட்டுமே நமது நாடு ஆரோக்கியமாக இருக்கும்” என்று 10 வயதான அந்த சிறுவன் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ALSO READ: Watch Video: ‘எனக்கு வேலை கிடச்சிடுச்சு…..’ குஷியில் ஆட்டம் போடும் பெண்ணின் Video!!
புதனன்று, குஜராத்தில் மொத்தம் 1,390 பேர் COVID-19 தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.
குஜராத் அரசாங்கத்தின் (Gujarat Government) கூற்றுபடி, மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 1,37,394 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,17,231 பேர் குணமடைந்து விட்டனர். 3,453 பேர் இறந்துள்ளனர். 16,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதன்கிழமை 298 புதிய தொற்றுகளுடன், மாநிலத்தில் COVID-19-ன் அதிகபட்ச தினசரி தொற்று தொடர்ந்து சூரத்தில் (Surat) பதிவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் 197 பேரும் ராஜ்கோட்டில் 151 பேரும் வதோதராவில் 133 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ALSO READ: COVID-19 Update: புதிய பாதிப்புகள் 86,821; மொத்த பாதிப்புகள் 63 லட்சத்தை தாண்டியது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR