லாக்-டவுன் திறந்ததும் தண்டவாளங்களில் ரயில்கள் வேகமாக இயங்கும்.. பணிகள் தீவிரம்

ரயில்கள் இயக்குவதை நிறுத்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகளில் கவனத்தை இந்தியன் ரயில்வே செலுத்தியுள்ளது.

Last Updated : May 1, 2020, 10:26 AM IST
லாக்-டவுன் திறந்ததும் தண்டவாளங்களில் ரயில்கள் வேகமாக இயங்கும்.. பணிகள் தீவிரம் title=

லக்னோ: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க நாடு முழுவதும் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து, ரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்து நிர்வாகம் இயக்குவதை தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ரயில்கள் இயக்குவதை நிறுத்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகளில் கவனத்தை இந்தியன் ரயில்வே செலுத்தியுள்ளது அதாவது தண்டவாளங்கள், வழித்தடம் போன்றவற்றை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பொழுது தான் ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் ரயில்களை பாதுகாப்பாகவும், சீராக இயக்க முடியும்.

இந்த ஊரடங்கு காலத்தில் லக்னோவில் புதிய தடங்களை இடுவதை ரயில்வே வேகமாக கண்காணிக்கிறது. பிரதேச ரயில்வே மேலாளர் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணி நடந்து வருகிறது. லக்னோ கான்பூர் ரயில் பிரிவின் உன்னாவ்-மகர்வாரா இடையே புதிய தடங்கள் இயந்திரமயமாக்கப் படுகின்றன.

இந்த பணி அதிவேக ரயில்களை இயக்குவதில் பல சிக்கல்களைக் குறைக்கும். ரயில் பயணம் முன்பை விட பாதுகாப்பாக இருக்கும். இருநூறுக்கும் மேற்பட்ட நீண்ட தூர ரயில்கள் லக்னோ வழியாக செல்கின்றன. இந்த பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த பணி விரைவான வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. 

ஊரடங்கு காலத்தில் ரயில்வே 30 லட்சம் பாக்கெட் இலவச உணவை விநியோகித்தது:

இதுவரை ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கெட் உணவை ரயில்வே விநியோகித்துள்ளது. இதுக்குறித்து இந்திய ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி, ரயில்வே 20 லட்சம் பாக்கெட் உணவை கொண்டு சென்றது. கடந்த 10 நாட்களில் மேலும் 10 லட்சம் பேருக்கு இலவச உணவை விநியோகித்தது. 

"உலகளாவிய தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட முன்னோடியில்லாத சூழ்நிலை ஏராளமான மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சிக்கித் தவிக்கும் மக்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள், வீடற்ற மக்கள், ஏழைகள் மற்றும் பல பிரிவினர். ஐ.ஆர்.சி.டி.சியின் சமையலறை, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) வளங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் மூலம் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ரயில்வே உணவுப் பொதிகளை வழங்குகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு உணவு விநியோகிக்கும் அதே வேளையில், அவர்களிடையே சமூக தூரமும் சுகாதாரமும் கவனிக்கப்பட்டது. 17.7 லட்சம் பாக்கெட் உணவுகளை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) வழங்கியது, சுமார் 5.18 லட்சம் பாக்கெட்டுகளை ஆர்.பி.எஃப் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது. சுமார் 2.53 லட்சம் பாக்கெட்டுகள் வணிக மற்றும் பிற ரயில்வே துறைகளால் வழங்கப்பட்டது மற்றும் சுமார் 5.60 லட்சம் பாக்கெட்டுகள் ரயில்வே அமைப்புகளுடன் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடை அளித்தன.

Trending News