எப்16 ரக விமானம் வாங்க இந்தியாவை நிர்பந்திக்க வில்லை :அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து எப் 16 ரக போர் விமானங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தவில்லை என அந்நாட்டின் தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2018, 12:26 PM IST
எப்16 ரக விமானம் வாங்க இந்தியாவை நிர்பந்திக்க வில்லை :அமெரிக்கா title=

உலக முழுவதும் 25 நாடுகளை சேர்ந்த விமான படைகளில் எப் 16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல இந்தியாவுக்கும் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்த வகை போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கவும், தயாரிக்கவும் அமெரிக்கா முடிவு செய்தது. மேலும் இதற்க்காக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. 

இந்நிலையில், எப் 16 ரக போர் விமானங்களை இந்தியா கட்டாயம் வாங்க வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. 

இதனையடுத்து, இந்த சர்ச்சைக் குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் கூறியது, எப் 16 ரக போர் விமானங்களை இந்தியா கட்டாயம் வாங்க வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்துவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு. எதற்க்காகவும் இந்தியாவை நிர்பந்திக்க வில்லை. அமெரிக்காவிடம் இருந்து தான் போர் விமான தளவாடங்களோ வாங்க வேண்டும் என இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை. ஆயுத கொள்முதல் தொடர்பாக இந்தியா எடுக்கும் முடிவுகளை நாங்கள் அங்கீகரிப்பதாகவும் கூறினார்.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணை வாங்குவதற்கு அமேரிக்கா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News