இந்தியாவில் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும், குறைவான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளது. ஏழு ஒன்றியப் பகுதிகளும் உள்ளது. ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.177 கோடி. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற அந்தஸ்தை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், குறைவான சொத்து வைத்திருப்பவர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ 27 லட்சம் ஆகும். இந்தியாவின் ஏழை முதல்வர் என்ற அந்தஸ்தை மாணிக் சர்க்கார் பெற்றுள்ளார்.