கல்லீரலை பலவீனப்படுத்தும் உணவுகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது மது அல்ல!

Liver Health: கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மோசமான உணவுகள் என்ன என்று கேட்டால், மது என்ற பதில் வரும். ஆனால் மதுவைத் தவிர, இந்த 5 விஷயங்கள் கல்லீரலை சேதப்படுத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 3, 2024, 12:11 PM IST
  • கல்லீரல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்
  • மதுவைத் தவிர கல்லீரலை சேதப்படுத்தும் பழக்கங்கள்
  • கல்லீரல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது?
கல்லீரலை பலவீனப்படுத்தும் உணவுகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது மது அல்ல! title=

கல்லீரலை சேதப்படுத்தும் உணவுகள்: கல்லீரலை சேதப்படுத்துவதற்கு ஆல்கஹால் காரணமாக கருதப்படுகிறது. ஆல்கஹால் தவிர, கல்லீரலை பாதிக்கும் பல விஷயங்கள் உள்ளன. கல்லீரல் உடலில் இரத்த வடிகட்டியாக செயல்படுகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே, கல்லீரலைப் பற்றி அலட்சியமாக இருப்பது மிகவும் மோசமான விஷயம். இருப்பினும், பல விஷயங்கள் மற்றும் தவறுகளால், கல்லீரல் சேதமடையலாம். மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் மது மட்டுமின்றி கல்லீரலை பாதிக்கும் பல விஷயங்கள் உள்ளன (Foods That Are Bad For Liver). கல்லீரலை சேதப்படுத்தும் அந்த விஷயங்களை பற்றி தெரிந்துக் கொண்டு அவற்றை நாம் ஒதுக்கினால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

கல்லீரலை சேதப்படுத்தும் உணவுகள் 
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது கல்லீரலில் வீக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் இதயத்திற்கு கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட உணவு
நீண்ட காலம் பாதுகாத்து வைப்பதற்காக உணவுகளை பதப்படுத்தி வைக்கிறோம். அவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது கல்லீரலுக்கு ஆபத்தானது. பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், சிப்ஸ் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

மேலும் படிக்க | கீரைகளில் சிறந்தது எது? தயக்கமே இல்லாமல் வரும் ஒரே பதில் முருங்கைக்கீரை தான்!

சர்க்கரை பானங்கள்
அதிக சர்க்கரை பானங்கள் குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும். சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால் உடல் எடை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமனால் கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும். சோடா மற்றும் பானங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் என்பதால் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
 
அதிக உப்பு சாப்பிடுவது
பலர் உப்பு அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்வது கல்லீரலுக்கு நல்லதல்ல. அதிக உப்பு சாப்பிடுவது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். உப்பு உட்கொள்வது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பு குறைவாக சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனிகள் உண்பதைத் தவிர்த்தால், அதிக உப்பு உடலில் சேராது.

வெள்ளை மாவு பொருட்கள்
கல்லீரலின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க, வெள்ளை மாவில் செய்யப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். பீட்சா, ரொட்டி, பாஸ்தா போன்றவற்றை உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் கல்லீரலுக்கு நல்லதல்ல.

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தினாலும், கடுகுக் கீரையை சாப்பிடாதீங்க! ஹெல்த் அலர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News