கர்நாடகாவின் அடுத்த முதல்வர் அரவிந்த் பெல்லாட் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்

கர்நாடகாவின் புதிய முதல்வராக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லட்டின் பெயர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அவருக்கு முதல்வர் பதவி உறுதி என கசிந்த தகவல்கள் கூறுகிறது 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 07:24 PM IST
  • கர்நாடகாவின் புதிய முதல்வராக அரவிந்த் பெல்லட் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
  • யார் முதல்வராக இருக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
  • மூத்த தலைவர் சந்திரகாந்த் பெல்லாட்டின் மகன் அரவிந்த் பெல்லாட் ஆவார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் அரவிந்த் பெல்லாட் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல் title=

பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என அறிவிக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ஏற்கனவே டெல்லி மேலிடத் தலைவர்கள் பெங்களூரை அடைந்துள்ளனர். கர்நாடகா வந்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜக சார்பில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் பெற்ற பிறகு அடுத்த முதல்வர் யார் என்பது இறுதி செய்யப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆனால் நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, யார் முதல்வராக இருக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.  சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பது சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே புதிய கர்நாடக முதல்வராக யாரை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நிருபிக்கும் விதமாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. மேலும் அவரின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் அவரை வாழ்த்தி வருகின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லட்டின் பெயர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அவருக்கு முதல்வர் பதவி உறுதி என கசிந்த தகவல்கள் கூறுகிறது. 

சமூக ஊடகங்களில் அடுத்த முதல்வர் பெல்லட் என புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது வைரலானதை அடுத்து, இதுக்குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ | அடுத்த கர்நாடகா முதல்வர் யார்? பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களின் விவரம்

ஹூப்ளி-தார்வாட் மேற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அரவிந்த் பெல்லட் ஊடகங்களில் அதிகம் அறியப்படாதவர். ஆனால் பாஜகவின் மேலிடத்திற்கு முதல்வர் பதவிக்கு தன்னை தகுதியானவர் என்று நிரூபிக்க முடிந்தது. 

2023 சட்டமன்றத் தேர்தளை கருத்தில் கொண்டும், சாதி, மதம், பிராந்தியவாதம், அமைப்பு மற்றும் அனுபவம் போன்ற திறமைகள் உள்ள பெயரை அறிவிக்க பாஜக மேலிடம் விரும்பியது. அதற்கு தகுந்தார் போல அரவிந்த் பெல்லாட்டின் பெயர் கிட்டத்தட்ட இறுதியானது எனக் கூறலாம். 

மூத்த தலைவர் சந்திரகாந்த் பெல்லாட்டின் மகன் அரவிந்த் பெல்லாட் ஆவார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட ஒரு இளம் அரசியல்வாதி. லிங்காயத் பிரிவு பஞ்சமசலியை சேர்ந்தவர். 51 வயதான அரவிந்த் பெல்லாட் (Aravind Bellad), ஹூப்ளி-தார்வாட்டில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு உள்ளர்.

ALSO READ | கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News